தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் முத்துராமன். சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சைலண்ட்டாக வந்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தர் இவர்.
இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திருமாங்கல்யம்”. இதில் இவர்களுடன் சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், லட்சுமி, பண்டரிபாய் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஏ.வின்சென்ட் இயக்கியிருந்தார். ஏ.எல்.நாராயணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“திருமாங்கல்யம்” திரைப்படம் ஜெயலலிதாவின் 100 ஆவது திரைப்படமாக அமைந்தது. ஆனால் இத்திரைப்படம் முத்துராமனின் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாகவும் அமைந்தது.
அதாவது இக்காலத்தில் ஒரு நடிகர் சர்வசாதாரணமாக கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அக்காலத்தில் அப்படியல்ல. அதிகபட்ச சம்பளமே லட்ச ரூபாய்தான். அதுவும் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது எளிதான காரியமும் அல்ல.
இந்த நிலையில் தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த முத்துராமன் முதன்முதலாக, “திருமாங்கல்யம்” திரைப்படத்தில்தான் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாராம். அதற்கு முன் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த முத்துராமனுக்கு ஆயிரங்களில்தான் சம்பளம் இருந்ததாம். “திருமாங்கல்யம்” திரைப்படத்தில்தான் அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.
இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாட அப்போதுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு முத்துராமன் பார்ட்டி வைத்தாராம். மேலும் அந்த பார்ட்டியை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்தான் தயார் செய்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…
சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம்…