ஜெயலலிதாவை “அம்மு” என்று அழைத்த பிரபல இயக்குனர்… கோபத்தில் என்ன பண்ணார் தெரியுமா??

Jayalalithaa and Sridhar
தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த பெருமைக்குரிய முதல்வராக திகழ்பவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை தொடர்ந்து சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து மக்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்தவர் இவர்.

Jayalalithaa
தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயலலிதா, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர்.

Sridhar
அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடம்பிடித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்த ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Jayalalithaa
ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு இயக்குனர் ஸ்ரீதர், ஏவிஎம் சரவணன் மற்றும் சில சினிமா முக்கியஸ்தர்கள் ஆகியோர் திரைப்படத்துறைக்கு தேவைப்படும் சலுகைகள் குறித்து ஜெயலலிதாவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தார்களாம். ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து முதல்வர் ஆனவர் என்பதால் சினிமாத்துறையில் உள்ள பிரச்சனைகளை குறித்து அவர் நன்கு அறிவார் என்பதால் அவரிடம் செல்லலாம் என எண்ணினார்களாம்.
இந்த விஷயம் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டபோது ஸ்ரீதர், ஏவிஎம் சரவணன் ஆகிய பலரையும் நேராக தனது வீட்டிற்கே வரச்சொல்லிவிட்டாராம் ஜெயலலிதா. அதன்படி ஸ்ரீதர், ஏவிஎம் சரவணன் உட்பட பலரும் ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

Jayalalithaa
அப்போது அவர்களை ஜெயலலிதா வரவேற்றபோது ஸ்ரீதர், ஜெயலலிதாவை பார்த்து “அம்மு, நல்லா இருக்கியாம்மா?” என நலன் விசாரித்தாராம். நடிகையாக இருக்கும்போது அம்மு என்று கூப்பிட்டு பழகியவராதலால் அவ்வாறு அழைத்துவிட்டார்.
அங்கே பல அரசு அதிகாரிகள், காவலர்கள் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முன் ஸ்ரீதர் “அம்மு” என்று தன்னை அழைத்தது ஜெயலலிதாவை சற்று கோபப்படுத்தியதாம். அதன் பின் எதுவுமே பேசாமல் ஜெயலலிதா உள்ளே சென்றுவிட்டாராம். சிறிது நேரத்தில் அவரது அறையில் இருந்து வெளியே வந்த உதவியாளர், ஸ்ரீதர், ஏவிஎம் சரவணன் ஆகியோர்களிடம் “நீங்கள் இன்னொரு நாள் தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வரை பாருங்கள்” என கூறினாராம். அதன் பின் அவர்கள் வெகு நாட்களாக முயன்றும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லையாம். அதனை தொடர்ந்து ஒரு நாள் ஸ்ரீதரை தவிர மற்ற அனைவரும் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார்களாம்.

Jayalalithaa and CV Sridhar
ஒரு முதல்வரை எப்போதும் தலைமை செயலகத்தில்தான் சந்திக்க முடியும். அதுதான் வரைமுறை. ஆனால் ஸ்ரீதர், ஏவிஎம் சரவணன் ஆகியோர் சினிமாவில் தன் உயரத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என்ற காரணத்தாலும், உரிமையாலும் ஜெயலலிதா, அவர்களை வீட்டிற்கே வந்து சந்திக்குமாறு அழைத்திருக்கிறார். ஆனால் அங்கே உயரதிகாரிகளும், காவலர்களும் இருக்கும்போது அவர்களின் முன்பே தன்னை “அம்மு” என ஸ்ரீதர் அழைத்தது ஜெயலலிதாவுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.