“ஒரு பெண் இப்படி அத்துமீறலாமா?”… பாக்யராஜை கேள்விகளால் துளைத்தெடுத்த ஜெயலலிதா… சப்போர்ட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்!!

Jayalalithaa, Bhagyaraj, MGR
1981 ஆம் ஆண்டு பாக்யராஜ், அம்பிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அந்த 7 நாட்கள்”. இத்திரைப்படத்தை பாக்யராஜ்ஜே இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Antha 7 Naatkal
பாக்யராஜ்ஜின் தனித்துவமான திரைக்கதை அம்சத்தில் உருவான இத்திரைப்படம், காலத்துக்கும் பேசப்படும் அளவுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இத்திரைப்படத்தில் பாக்யராஜ், அம்பிகா வீட்டு மொட்டை மாடியில் குடியிருப்பார். இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர்ந்து விடும். அத்தருணத்தில் ஒரு நாள் நடு ராத்திரியில் தனது காதலனான பாக்யராஜ்ஜை சந்திக்க செல்வார் அம்பிகா. பாக்யராஜ் “இந்த நேரத்தில் கன்னி பொண்ணு வரலாமா?” என கேட்டு அவரை விரட்டப் பார்ப்பார். ஆனால் அம்பிகா, பாக்கியராஜ்ஜிடம் “முத்தம் கொடுத்தால்தான் போவேன்” என கூறுவார். இவ்வாறு இந்த காட்சி அமைந்திருக்கும். இந்த நிலையில் இந்த காட்சியை குறிப்பிட்டு ஜெயலலிதா, பாக்கியராஜ்ஜிடம் ஒரு கேள்வி கேட்டாராம்.

Antha 7 Naatkal
பாக்கியராஜ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது ஜெயலலிதா “இப்போது வரும் திரைப்படங்களில் அத்துமீறி பல விஷயங்கள் நடக்கிறது. உதாரணமாக உங்களது அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அம்பிகா நடு ராத்திரியில் உங்களிடம் வந்து முத்தம் கேட்பது போல் ஒரு காட்சியை வைத்திருந்தீர்கள். ஒரு பெண் கட்டுக்காவலை எல்லாம் மீறி அப்படி நடந்துகொள்வாரா?” என கேட்டாராம்.
இதையும் படிங்க: சிம்புவுக்கே சவால் விட்ட அறிமுக நடிகை… பின்னாளில் டாப் நடிகையாக வலம் வந்த தரமான சம்பவம்!!

Jayalalithaa
அதற்கு பாக்யராஜ் பதில் கூற வந்தபோது, எம்.ஜி.ஆர் இடைமறித்து “அதற்கான பதிலை நான் கூறுகிறேன்” என்றாராம். அதன் பின் பேசத் தொடங்கிய எம்.ஜி.ஆர் “என்னுடைய வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒரு காலத்தில் ஒரு பெண் என்னிடம் அவராகவே வந்து அப்படி நடந்துகொண்டார். எனக்கு இதில் விருப்பம் இல்லை என கூறினேன். ஆனாலும் என்னை அவர் விடவில்லை. அந்த பெண்ணை சமாளித்து சரி செய்வதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது” என கூறினாராம்.

MGR
இந்த சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பாக்யராஜ் “சில பெண்கள் ஆண்களை விட மிகவும் வைராக்கியமாக இருப்பார்கள். காதலனை சந்திக்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தை காட்டுவதற்காகத்தான் அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அப்படி ஒரு காட்சியை வைத்தேன். எல்லா பெண்களும் அப்படி இல்லை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.