நடு ராத்திரியில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஜெயலலிதா… நடந்தது என்ன?

Jayalalithaa
தமிழக மக்களால் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவர் ஜெயலலிதா. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளர்ந்து, அதன்பின் தமிழக மக்களின் முதல்வராக உயர்ந்து நின்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா.

Jayalalithaa
இவ்வாறு பல புகழ்களை கொண்ட ஜெயலலிதாவின் பதின்பருவம் மிக மோசமாகவே அமைந்தது. அதுமட்டுமல்லாது அவர் மிகப் பெரிய நடிகையான பிறகும் கூட தனது உறவினர்களின் துரோகத்தால் மிகப் பெரிய துன்பத்திற்கு உள்ளானாராம்.
இந்த நிலையில் பிரபல மருத்துவரான டாக்டர்.காந்தராஜ், ஜெயலலிதா வாழ்க்கையில் நடந்த ஒரு துரோக சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Dr.Kantharaj
“ஜெயலலிதாவின் உறவுக்காரர்கள் அவருக்கு மிகப் பெரிய துரோகங்களை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் போயஸ் கார்டனின் வீடு சில பிரச்சனைகளால் ஏலம் போய்விட்டது. அவரின் உறவுக்காரர்கள்தான் அதற்கு காரணம். அவரை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஒரு நாள் நடுராத்திரியில் வெளியே துரத்தி விட்டார்கள்.

MGR
இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரியவந்தவுடன் உடனே அவரது கடன்களை எல்லாம் அடைத்து, மீண்டும் அந்த போயஸ் கார்டன் வீட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். அந்த நேரத்தில் நடராஜன் என்ற பிஆர்ஓவை ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

Jayalalithaa
அப்போது வீடியோ கடை வைத்திருந்த நடராஜனின் மனைவி சசிகலா, ஜெயலலிதாவுக்கு வீடியோ கேஸட்டுகளை கொடுக்க வருவார். அப்படித்தான் சசிகலாவும் ஜெயலலிதாவும் நண்பர்களானார்கள். தன்னுடைய உறவுக்காரர்கள் எல்லாம் துரோகம் செய்தபோது உண்மையான தோழியாக சசிகலா இருந்தார் என்பதற்காகத்தான் அவரிடம் மிக நெருக்கமாக பழகினார் ஜெயலலிதா” என்று அப்பேட்டியில் காந்தராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூஸிலாந்தில் பாத்ரூம் கழுவினேன்… சாக்லேட் பாய் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா!