“உன் ஆசையை குழி தோண்டி புதைச்சிடு”.. ஜெயலலிதாவிடம் கண்டிஷனாக சொன்ன தாயார்… என்ன காரணம் தெரியுமா??

Jayalalithaa
ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக திகழ்ந்தவர். மிகவும் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த சந்தியாவிற்கு தனது மகளான ஜெயலலிதாவையும் தனது மகனையும் சரியாக கவனித்துக்ககொள்ள முடியவில்லை.

Jayalalithaa
ஆதலால் தனது மகள் ஜெயலலிதாவையும் தனது மகனையும் பெங்களுரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். பெங்களூரில் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா விடுமுறை நாட்களின் போது சென்னைக்கு வந்து தனது தாயாரை அடிக்கடி சந்திப்பார்.
ஷூட்டிங் பார்த்த ஜெயலலிதா
அப்போது ஒரு முறை சந்தியா, தான் நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தனது மகளை அழைத்துச் சென்றார். அப்போது அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு சரியாக இல்லை. அந்த தருணத்தில் அத்திரைப்படத்தின் இயக்குனர் 12 வயதே ஆன ஜெயலலிதாவை பார்க்க நேர்ந்தது.

Jayalalithaa
உடனே சந்தியாவிடம் சென்ற இயக்குனர் “உங்கள் மகளை ஒரு காட்சியில் நடிக்க வைக்க முடியுமா? என கேட்டார். அதற்கு சந்தியா எந்த பதிலும் கூறவில்லை. ஏனென்றால் சந்தியாவிற்கு தனது மகள் சினிமாவில் நடிப்பதில் துளி கூட விருப்பம் இல்லை. எனினும் அத்திரைப்படத்தின் இயக்குனரே இறங்கி வந்து கேட்கும்போது அவரால் மறுக்க முடியவில்லை. இவ்வாறுதான் கன்னட திரைப்படமான “ஸ்ரீ சைல மகாத்மே” என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
உஷாரான சந்தியா
ஜெயலலிதா அத்திரைப்படத்தில் நடித்த பிறகு இனி எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கும் ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல கூடாது என முடிவெடுத்தாராம் சந்தியா.
ஓங்கி அறைந்த சந்தியா
ஒரு நாள் சந்தியாவின் மேக்கப் பொருட்களை எடுத்து பார்த்துக்கொண்டிருந்த ஜெயலலிதா தனது முகத்தில் வண்ணங்களை பூசி அழகு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் நுழைந்த சந்தியா இதனை பார்க்க நேர்ந்தது. ஓடிப்போய் ஜெயலலிதாவின் கன்னத்தில் அறைந்தாராம் சந்தியா.

Jayalalithaa
கண்களில் துளிர்த்த கண்ணீர்
தனது மகளை அதுவரை சந்தியா அடித்ததே இல்லை. முதல்முறையாக தனது மகளை அடித்துவிட்டோமே என்ற துக்கத்தில் அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியதாம். உடனே ஜெயலலிதாவை அரவணத்துக்கொண்டார் சந்தியா.
அப்போது ஜெயலலிதா “ஏன் அம்மா என்ன அடிச்சீங்க?” என கேட்டாராம். அதற்கு அவர் “இந்த பாழாப்போன சினிமாவின் மேல் உனக்கு ஆசை வந்து, நீயும் நடிகை ஆகிவிடப் போறியோ என்று பயந்துப்போய்தான் உன்னை அடித்துவிட்டேன்” என கூறினாராம்.

Jayalalithaa
மேலும் பேசிய அவர்”ஒரு சினிமா நடிகையாக நான் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த கஷ்டங்களை எல்லாம் நீ அனுபவிக்ககூடாது என்பதனால்தான் சினிமா வாசனையே இல்லாமல் உன்னை வளர்க்க வேண்டும் என நினைத்தேன். அந்த ஒரு படத்தில் உன்னை நடிக்க வைத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இப்போது சொல்கிறேன். உனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அந்த ஆசையை இன்றைக்கே குழி தோண்டி புதைச்சிடு” என கண்டிப்போடு கூறினாராம். இதனை கேட்ட ஜெயலலிதா இனி சினிமாவில் தான் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்தாராம்.
சினிமாவில் ஜெயலலிதா

Jayalalithaa
என்னதான் ஜெயலலிதா சினிமாவை கைவிட்டாலும், ஜெயலலிதாவை சினிமா கைவிடவில்லை. ஒரு கட்டத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தது. ஜெயலலிதா கல்லூரி வயதை அடைந்தபோது சந்தியாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோனது. அப்போது வறுமை காரணமாக சந்தியாவே ஜெயலலிதாவை சினிமாவில் நடிக்குமாறு கூறினாராம். அதன் பிறகுதான் ஒரு நடிகையாகவும், அதன் பின் தமிழகத்தை பல முறை ஆட்சி செய்த முதல்வராகவும் உருவானார் ஜெயலலிதா.