ரஜினிகாந்த் Vs ஜெயலலிதா
1995 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். மேலும் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் ரஜினிகாந்த்தும் கலந்துகொண்டார்.
அப்போது அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை பார்த்தவாறு “நான் இப்போது மிகவும் டென்ஷனாக இருக்கிறேன். நீங்கள் திறந்து வைத்தீர்களே ஃபிலிம் சிட்டி, அதனை திறந்து வைத்தபோதே சிவாஜி சாரை கௌரவப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சிவாஜி சாரை மதிக்கவில்லை. நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு. தவறு செய்வது மனித குணம். தவறை திருத்துக்கொள்வது மனிதத்தனம்” என பேசினார்.
ரஜினிகாந்த்தின் இந்த பேச்சை கேட்டவர்கள் அதிர்ந்துபோனார்கள். ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது தற்செயல் அல்ல. மிகவும் தெளிவாக திட்டமிட்டு பேசினார் என ஒரு வீடியோவில் சித்ரா லட்சுமணன் இந்த சம்பவத்தை குறித்து பேசியிருந்தார்.
கடவுளால் கூட காப்பாற்ற முடியாது
ரஜினிகாந்த் 1996 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஜெயலலிதா குறித்து ஒரு காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது “ஜெயலலிதா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த காலகட்டத்தில் ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே பனிப்போர் நிகழ்வதாக பேச்சுக்கள் எழ தொடங்கின.
படையப்பா
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கதாப்பாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்துத்தான் எழுதப்பட்டதாக பலர் கூறி வந்தனர்.
இதையும் படிங்க: “ஜெய்சங்கர் அந்த தவறை செஞ்சிருக்ககூடாது”… தென்னகத்து ஜேம்ஸ் பாண்டின் வாழ்க்கையை தலை கீழாக்கிய சம்பவம்…
“படையப்பா” திரைப்படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது “நீலாம்பரி கதாப்பாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்ட கதாப்பாத்திரம்” என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
மன்னன்
இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு வெளியான “மன்னன்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் திமிர் பிடித்த பெண் கதாப்பாத்திரமான விஜய சாந்தியை அடக்குவது போல் நடித்திருப்பார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை இயக்குனர் பி.வாசு ஜெயலலிதாவுக்கு திரையிட்டு காட்டினாராம்.
“மன்னன்” படத்தை ஜெயலலிதா பார்த்துவிட்டு என்ன சொல்லப்போகிறாரோ? என அனைவரும் காத்திருந்தனர். படத்தை பார்த்துவிட்டு வந்த ஜெயலலிதா, பி.வாசுவை பார்த்து “எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. மிகவும் ரசித்து பார்த்தேன்” என கூறினாராம். மேலும் பேசிய அவர் “ஜெயலலிதா ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகர். தனக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் என அவரே பல முறை சொல்லியிருக்கிறார்” என கூறியது குறிப்பிடத்தக்கது.
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…