Connect with us
Sathyaraj and Jayalalithaa

Cinema News

மந்திரியை செருப்பால் அடித்த சத்யராஜ்… மனம் திறந்து பாராட்டிய ஜெயலலிதா… என்னவா இருக்கும்?

தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் பி.வாசு. “சின்ன தம்பி”, “நடிகன்”, “மன்னன்”, “உழைப்பாளி”, “சந்திரமுகி” போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பெருமை பி.வாசுவையே சேரும்.

P Vasu

P Vasu

வாசு-பாரதி

இயக்குனர் பி.வாசு, சந்தான பாரதி ஆகியோர் பிரபல இயக்குனரான சி.வி.ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். அதனை தொடர்ந்து இருவரும் இணைந்து “பன்னீர் புஷ்பங்கள்”, “மது மலர்”, “மெல்ல பேசுங்கள்”, “நீதியின் நிழல்” போன்ற திரைப்படங்களை இயக்கினார்கள். இவ்வாறு சில திரைப்படங்களை இணைந்து இயக்கிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் தனி தனியாக திரைப்படங்களை இயக்கலாம் என முடிவு செய்தனர்.

P Vasu and Santhana Bharathi

P Vasu and Santhana Bharathi

டாப் ஹிட் படங்கள்

இதனை தொடர்ந்து பி.வாசு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து தமிழில் அவர் தனியாக இயக்கிய முதல் திரைப்படமாக “என் தங்கச்சி படிச்சவ” என்ற திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து “பிள்ளைக்காக”, “பொன்மன செல்வன்”, “வாத்தியார் வீட்டுப் பிள்ளை” போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

பணக்காரன்

இத்திரைப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து “பணக்காரன்” என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார் பி.வாசு.

P Vasu

P Vasu

சந்திரமுகி

பி.வாசு, ரஜினியை வைத்து இயக்கிய “சந்திரமுகி” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. குறிப்பாக ரஜினியின் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

Chandramukhi

Chandramukhi

சத்யராஜ்

ரஜினியை போலவே சத்யராஜ்ஜை வைத்தும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் பி.வாசு. குறிப்பாக “வாத்தியார் வீட்டுப்பிள்ளை”, “வேலை கிடைச்சிருச்சி”, “நடிகன்”, “ரிக்சா மாமா’, “வால்டர் வெற்றிவேல்”, “உடன்பிறப்பு” போன்ற திரைப்படங்கள் சத்யராஜ்ஜின் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்தது.

Sathyaraj

Sathyaraj

வால்டர் வெற்றிவேல்

1993 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா, ரஞ்சிதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வால்டர் வெற்றிவேல்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இதனை குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பி.வாசு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “ஒரு சிகரெட் கிடைக்குமா?”… ரஜினியிடம் கேஷுவலாக கேட்ட மகேந்திரன்… ஆனால் உருவானதோ ஒரு கல்ட் சினிமா…

Walter Vetrivel

Walter Vetrivel

மந்திரியை செருப்பால் அடிக்கும் கதை

“வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு போட்டுக்காட்ட பயமாக இருந்தது.  மந்திரியை செருப்பால் அடிப்பது போன்ற கதை அது. இத்திரைப்படத்தை பார்த்தால் ஜெயலலிதா உண்டு இல்லை என்று செய்துவிடுவார் என என்னை பயங்காட்டினார்கள்.

Jayalalithaa

Jayalalithaa

ஆனால் நான் தைரியமாக அவருக்கு போட்டுக்காட்டினேன். அப்படத்தை பார்த்து முடித்த ஜெயலலிதா ‘ஒரு மந்திரி எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை இத்திரைப்படத்தின் மூலம் கூறியிருக்கிறீர்கள். அதே போல் ஒரு போலீஸ் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது எனவும் கூறியிருக்கிறீர்கள்’ என்று என்னை பாராட்டினார்” என அப்பேட்டியில் பி.வாசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top