அஜித்தை கோர்த்துவிடப் பார்த்த ஜெயலலிதா… தல என்ன சொன்னார் தெரியுமா??
தமிழ் சினிமாவின் டாப் நடிகராகவும், பெரும்பான்மையான ரசிகர்களை தனது கைக்குள் போட்டு வைத்திருப்பவருமான அஜித்குமார், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களையும் அடிகளையும் சந்தித்துள்ளார்.
தொடக்கத்தில் காதல் மன்னனாகவும், சாக்லேட் பாய் ஆகவும் திகழ்ந்து வந்த அஜித்குமார், “அமர்க்களம்”, “தீனா” போன்ற திரைப்படத்திற்குப் பிறகு ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார். அதன் பின் தமிழ் சினிமா ரசிகர்களின் ‘தல’ ஆக உயர்ந்தார்.
அஜித்குமாரின் ரசிகர் பட்டாளத்தை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. மிகவும் வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை கொண்டவர் அவர். எனினும் தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்க்கையில் நன்றாக படித்து முன்னேறுங்கள், குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என அவ்வப்போது அறிவுரை கொடுத்துக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தனக்கு இருந்த ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டார்.
மேலும் “அல்டிமேட் ஸ்டார்” என்ற பட்டத்தையும் துறந்தார். அதே போல் சமீபத்தில் தன்னை “தல” என்று அழைக்கவேண்டாம் எனவும் தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இது போன்ற செயல்களால் அவரது ரசிகர்களின் எண்ணிக்கைக்கு எந்த பங்கமும் விளையவில்லை. அந்தளவுக்கு ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்திருப்பவர் அஜித்.
நடிகர் விஜய் டாப் நடிகராக வளர்ந்தபோது, அவருக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் வந்தது. சமீபத்தில் கூட விஜய்யின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் அஜித் தான் அரசியலில் நுழையப்போவதாக என்றுமே கூறியது இல்லை.
ஆனால் அஜித்குமாரை அரசியலுக்குள் இழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயன்றதாக ஒரு பேட்டியில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.
“ஜெயலலிதாவுக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். தன்னுடைய மகனைப் போலவே அஜித்தை பார்த்தார் ஜெயலலிதா. அஜித்குமார்-ஷாலினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: ரணகளத்துக்கு நடுவே அஜித்-விஜய் இணைந்து நடித்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்த படக்குழு… அடடா!!
ஜெயலலிதா எப்போதும் மிக முக்கியமானவர்களின் திருமண நிகழ்வில்தான் கலந்துகொள்வார். இந்த நிலையில்தான் அஜித்குமார் திருமண நிகழ்விலும் கலந்துகொண்டார்.
அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா அஜித்திடம், தனது கட்சியில் சேர்ந்து ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாராம். அதற்கு அஜித், ‘நான் நடிக்கத்தான் வந்தேன். ஆதலால் என்னை விட்டுவிடுங்கள்’ என கூறி மறுத்துவிட்டார்” என அப்பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருந்தார்.