Connect with us

Cinema History

ஜெயலலிதாவின் திடீர் ஆசையால் கைவிடப்பட்ட அவர் கடைசிப்படம்… என்னவானது?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாகவும் மின்னியவர். 1965-ம் ஆண்டு முதல் 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல சினிமாத் துறைகளிலும் பணியாற்றியவர்.

ஜெயலலிதாவின் தாய் சந்தியா, தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர். பி.ஆர்.பந்துலு இயக்கிய கர்ணன் படத்திலும் அவர் நடித்திருந்தார். இதனால், சிறு வயது முதலே ஜெயலலிதா தனது தாயுடன் பல நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று வந்திருக்கிறார். பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், மணிப்பூரி, கதக் போன்ற நாட்டியக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றார். 1960-ல் மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்த அவரது அரங்கேற்றத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் நடிகர் சிவாஜி. ஜெயலலிதாவின் நடனத் திறமையை வியந்த அவர், தங்க சிலை என பாராட்டினார்.


பள்ளி காலம் முதலே தொடர்ச்சியாக நாடகங்களில் நடித்து வந்த ஜெயலலிதா, 1965-ம் ஆண்டு சி.வி.ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடித்தது, அவருக்குப் பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இளம் வயதில் வழக்கறிஞராக விரும்பிய அவரது கரியர் இதனால் மடைமாறியது.

அப்போது இவருக்கு 18 வயது நிரம்பாததால், ஏ சர்டிபிகேட் கிடைத்திருந்த வெண்ணிற ஆடை படத்தை இவரால் தியேட்டரில் பார்க்க முடியவில்லையாம். நாகர்ஜூனாவின் தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த மனசுலு மன்மதலு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். சுவாரஸ்யமாக இவரது கடைசிப் படத்தின் ஹீரோவும் நாகேஸ்வர ராவ்தான். அதேபோல், என்.டி.ஆருடன் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்த ஜெயலலிதாவுக்கு அரச கட்டளை படத்தின் டைட்டில் கார்டில் கவர்ச்சி கன்னி என்ற அறிமுகம் கிடைத்தது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஸ்கர்ட் அணிந்து நடித்தது ஜெயலலிதாதான். தர்மேந்திராவுடன் இணைந்து இஸாட் என்கிற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார். 1965 முதல் 1973 ஆண்டுகளுக்கிடையில் எம்.ஜி.ஆருடன் இணைந்து கிட்டத்தட்ட 28 படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயலலிதா

இவரது கரியரில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாக வெற்றிபெற்றவை என்பதால், ஹிட் நாயகி என்றே அழைக்கப்பட்டார். இவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த முதல் படம் 1965-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன். கடைசிப் படம் 1973-ல் வெளியான பட்டிக்காட்டு பொன்னையா. நடிகை சாவித்ரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 1966ம் ஆண்டுக்குப் பிறகு சாண்டோ சின்னப்பத் தேவரின் பெரும்பாலான படங்களில் நாயகி வேடம் ஜெயலலிதாவுக்கே கிடைத்தது. குறிப்பாக 1966-ம் ஆண்டு மட்டுமே 11 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை நாயகியாக்க விரும்பிய எம்.ஜி.ஆர்…! நடக்காததால் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க…!

எம்.ஜி.ஆரின் மனதில் இடம்பிடித்த ஜெயலலிதாவை அவர் தொடர்ச்சியாக அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் அரை மனதாகவே இருந்தார் ஜெயலலிதா என்றே கூறலாம். இந்த சூழ்நிலையில், ஒரு படத்தில் ஜெயலலிதா நடித்துக் கொண்டிருந்தார். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60% அளவுக்கு முடிவடைந்திருந்த நிலையில் படம் கைவிடப்பட்டது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்ததால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பாக்யராஜ் படங்களில் நடித்து புகழ்பெற்ற நளினிகாந்த், இதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். விஜய்யின் கத்தி படத்தில் முதியவர் வேடத்தில் நடித்தவர் அவர். ஜெயலலிதாவின் கடைசிப் படம், அவரது முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டிய படமாம்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top