ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து!… இரு தரப்புக்கும் ஐகோர்ட் கொடுத்த உத்தரவு?!… திடீர் ட்விஸ்ட்..!

Published on: November 15, 2024
---Advertisement---

ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் இன்றே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. நட்சத்திர ஜோடிகளை காட்டிலும் மிகப் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி. மிகவும் ஒற்றுமையான தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து வந்தார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் விவாகரத்து பற்றிய அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதையும் படிங்க: பெரிய ஸ்டார்களுக்கு அவ்வளவுதான் ஞானமா?!… சொம்பு தூக்கிங்க அடக்கி வாசிங்க… பொளந்து தள்ளிய பிரபலம்!..

இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் ஆர்த்தி ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது. அவரது முடிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் பலமுறை ஜெயம் ரவியை தனியாக பார்த்து பேசுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக என்று கூறி தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து சமூக வலைதள பக்கங்களில் ஆர்த்தி ஜெயம் ரவியை செய்த டார்ச்சர் காரணமாக தான் விவாகரத்து அறிவித்திருக்கின்றார். அவருக்கு சுதந்திரம் கிடையாது. எல்லாம் முடிவுகளையும் அவரது மனைவி ஆர்த்தி தான் எடுக்கின்றார் என்று பல சர்ச்சைகள் இணையத்தில் உலா வர தொடங்கியது. அதிலும் நடிகர் ஜெயம் ரவியின் அறிக்கைக்கு பிறகு ஆர்த்தியின் பெயர் அதிக அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆர்த்தி தன்னுடைய தரப்பில் இருந்து ஜெயம் ரவியின் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயத்தை மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் தன் மீது களங்கம் விளைவிக்கும் விதமாக சில பேச்சுகள் அடிபட்டதால் மட்டும் இந்த விளக்கத்தை கொடுப்பதாகவும், ஜெயம் ரவி தன்னுடன் ஆலோசித்து விவாகரத்து முடிவை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

jeyam ravi

இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஜெயம் ரவி இந்த வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரின் மனைவியான ஆர்த்தி ரவி காணொளி காட்சி மூலமாக ஆஜரானார்.

நீதிபதி இவர்கள் இருவரையும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதுவும் இன்றைய தினமே இந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவரின் சமரச பேச்சு வார்த்தைக்கு பிறகு ஜெயம் ரவியின் முடிவை பொருத்து விவாகரத்து அறிவிப்பார்கள். ஏனென்றால் ஆர்த்தி ரவி தனது கணவர் ஜெயம் ரவியை விவாகரத்து செய்வதற்கு விரும்பவில்லை.

இதையும் படிங்க: Biggboss Tamil: சீசீ… பிக்பாஸில் ஆனந்தி போட்ட ’அந்த’ சப்தம்… இதுவே பசங்க பண்ணா என்ன ஆகிருக்கும்?

ஜெயம் ரவி மட்டுமே ஆர்த்தியை விட்டு பிரிவதற்கு முடிவு செய்திருக்கும் நிலையில் ஜெயம் ரவி எடுக்கும் முடிவை பொருத்து இந்த வழக்கில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவருக்கும் இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.