Connect with us
simbu

Cinema News

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில சிம்புகிட்ட வந்து நிக்குதே! சூடுபிடிக்கும் ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சினை

Simbu Jayam Ravi: தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை. கோலிவுட்டில் ஒரு சிறந்த தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் ஜெயம் ரவியும் ஆர்த்தியும். எல்லார் கண்ணும் படும் அளவுக்கு இவர்களின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருந்தது.

இதோடு ரீல்ஸ் வீடியோக்கள் போட்டோஷூட்கள் என பல புகைப்படங்களை வெளியிட்டு மற்றவர்களின் மனசை கிறங்கடித்தார்கள். ஒரு லவ் கப்பிலாகவே வலம் வந்து கொண்டிருந்தார்கள் ஜெயம் ரவியும் ஆர்த்தியும். இந்த நிலையில் திடீரென ஜெயம் ரவி தரப்பிலிருந்து விவாகரத்து கேட்டு மனு ஒன்று நீதிமன்றத்தில் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஒரே ராகம்… வெவ்வேறு ஜாலம்… இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான அந்த ரெண்டு பாடல்கள்

இத்தனைக்கும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஜெயம் ரவியும் ஆர்த்தியும். இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். அழகான குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை என இவர்களுடைய லைப் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆனதிலிருந்து ஜெயம் ரவியின் தரப்பில் இருந்தோ ஆர்த்தியின் தரப்பில் இருந்தும் எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது  ‘உங்களுக்கு எதுக்குடா கல்யாணம்? இருந்தா சிம்பு மாதிரி இருங்க.

இதையும் படிங்க: ஆன்ட்டி ஹீரோவை பிரபலமாக்கியவர் நடிகர் திலகம் தான்… பத்மினி படத்தில் அப்படி ஒரு மோசமான வேடமா?

கல்யாணமே பண்ணாதீங்க. சிம்பு எவ்வளவோ இதுக்கு மேல். சிம்புவுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியும். காதலித்து ஏமாற்ற கூட தெரியாது. ஏமாறத்தான் தெரியும். இப்படி ஏமாறாமல் கல்யாணமே செய்யாமல் இருக்கிறார் பாருங்கள் சிம்பு. அவர்தான் சரி. திருமணம் பற்றி சிம்புவிடம் கேள்வி கேட்டாலும் சரியான பதிலடிகை தான் கொடுப்பார்.

அதாவது வாழ்ந்தால் கரெக்டாக வாழ்ந்து விடுங்கள். இல்லை என்றால் வாழவே முடியாது என தெரிந்தால் கல்யாணமே பண்ணிக் கொள்ளாதீர்கள் என்றுதான் சிம்பு சொல்வார். இந்த வகையில் சிம்பு மிகச்சரியாக இருக்கிறார். அவரால் யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் காதலித்துக் கொள்ளுங்கள் .ஏமாற்ற போகிறீர்களா ஏமாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லா இருந்துட்டு போங்க என்றுதான் அவர் இருக்கிறார். பேசாமல் அப்படி இருங்க’ என ஜெய்சங்கர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘எஜமான் காலடி மண்ணெடுத்து’னு பாடுனா மட்டும் போதுமா? இறங்கி செஞ்சாருல விஜய்.. ஆவேசத்தில் அந்தணன்

google news
Continue Reading

More in Cinema News

To Top