ஜெயம் ரவி, ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமாம்... பிரபலம் சொன்ன மறுக்க முடியாத தகவல்

by sankaran v |   ( Updated:2024-09-14 02:22:46  )
JRAr
X

JRAr

இன்று பெரும்பாலான தம்பதியருக்குள் பிரிவு வரக் காரணமே ஈகோ தான். இருவருமே படித்தவர்களாக வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில் இது இன்னும் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். தனுஷ் - ஐஸ்வர்யா, சமந்தா - நாகசைதன்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, பார்த்திபன் - சீதா, நளினி - ராமராஜன் என பலரையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

Also read: எழுந்திருக்க முடியாத நிலையிலும் அஜித் செய்த மாபெரும் செயல்! இன்னும் எத்தனைதான் இருக்கு?

இது அவர்களுக்குள் இருக்கும் தவறான புரிதலைத் தான் காட்டுகிறது. இருவரும் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் ஈகோ தலை விரித்தாட ஆரம்பித்து விடுகிறது.

ஒருவர் சுதந்திரத்தில் இன்னொருவர் மூக்கை நுழைக்கும் போதும் இந்தப் பிரச்சனை வருவதுண்டு. தனிக்குடித்தனம் சுதந்திரம் என்பதை மட்டும் பார்த்து வருவது. ஆனால் அதுவே நாளடைவில் பிரச்சனையாகி விடுகிறது.

JRAR1

JRAR1

ஜெயம் ரவி, ஆர்த்தி பிரச்சனையில் இது சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ஜெயம் ரவி ஆர்த்திக்குத் தெரியாமலேயே விவாகரத்து அறிக்கை வெளியிட்டது தான் ஹைலைட்.

ஆர்த்தி எதுவும் சொல்லாமலேயே திடீர்னு விவாகரத்து அறிக்கை வெளியிட்டு விட்டாரே... பிள்ளைகளின் நிலை என்ன என்பதையும் பார்க்காமல் இப்படி செய்து விட்டாரே என ஆதங்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்து எப்படி ஏன் நடந்ததுங்கறது தான் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, ஆர்த்தி 6 மாசம் முன்னாடி வரைக்கும் ஹேப்பியாகத் தானே இன்டர்வியு கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னாச்சு..? டைவர்ஸ் வரைக்கும் போயிட்டாங்கன்னு ஒரு வாசகர் கேள்வி கேட்டுருக்காங்க. அதற்குப் பதில் சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

இன்றைய காலகட்டத்தில் ஈகோ தான் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரையும் மிகச் சுலபமாகப் பிரிக்கக்கூடிய ஆற்றல் அந்த ஈகோவுக்கு உண்டு. அதில் இருந்து நாம தான் தள்ளிக் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story