ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி!.. அப்ப கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதானா?!..

Published on: June 24, 2024
jayam ravi
---Advertisement---

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இவரின் அப்பா மோகன் பல படங்களுக்கும் எடிட்டராக இருந்தவர். துவக்கத்தில் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த படங்களின் தமிழ் ரீமேக்கில் மட்டும் நடித்து வந்தார் ரவி. ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார்.

பெரிய வசூல் இல்லை என்றாலும் ஜெயம் ரவியை வைத்து படமெடுத்தால் நஷ்டம் இல்லை என்கிற அளவுக்கு அவரின் இமேஜ் இருந்தது. அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் ரவி நடித்த தனி ஒருவன் படம் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படமும் அவருக்கு ஹிட் அடித்தது.

அதேநேரம், அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சைரன், அகிலன் போன்ற படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ரவி ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உண்டு. இந்நிலையில்தான், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் செய்தி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

aarthi

அதேநேரம் இது வெறும் வதந்தி எனவும் சிலர் சொல்லி வந்தனர். ஆனால், சில சினிமா பத்திரிக்கையாளர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தே விட்டார்கள் என்று அடித்து சொன்னார்கள். இதுவரை ஜெயம் ரவியோ, ஆர்த்தியோ சமூகவலைத்தளங்களில் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவர் ஜெயம் ரவி தொடர்பான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். சமீபத்தில் கூட ஜெயம் படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியதை கொண்டாடும் வகையில் ஆர்த்தி இன்ஸ்டாவில் பதிவு போட்டியிருந்தார்.

தற்போது அதை நீக்கிவிட்டார். நடப்பதை பார்க்கும்போது ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரத்து உணமைதான் என நம்ப வைக்கிறது. சமீபத்தில்தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். தற்போது விவாகரத்து பெறும் அடுத்த திரை பிரபலமாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.