தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம். படத்தை கிராமத்து மணம் மாறாத கதைகளை இயக்குவதில் வல்லவரான முத்தையா இயக்கியிருந்தார். மீண்டும் தன் திறமையை நிரூபித்திருந்தார் முத்தையா.
படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இதானி நடித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்து இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை எடுத்திருந்தார் முத்தையா. படத்தில் பிரபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தில் ஆர்யா நடிச்சதை விட அடிச்சார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு படமுழுக்க சண்டை காட்சிகள் நிறைந்து வழிந்தன. அதனாலேயே மக்கள் அந்த அளவுக்கு ரசிக்கவில்லை. மேலும் வெயில் தாங்க முடியலைனு படம் பார்க்க போனால் படத்தை பார்த்த பிறகு இதுக்கு அந்த வெயிலே பரவாயில்லைனு தோணுச்சு என்று படத்தை பார்த்து வெளியே வந்தவர்கள் எல்லாரும் சொன்னார்கள்.
ஆர்யாவின் சம்பளம் இவ்ளவா?
மேலும் படத்தின் மொத்த வசூலே 4 கோடிதானாம். ஆனால் இந்தப் படத்திற்காக ஆர்யா வாங்கிய சம்பளம் 14 கோடி மற்றும் முத்தையாவுக்கு 3 கோடியாம். அதனால் விஷயம் தெரிந்த சிலர் கோடிகளில் சம்பளத்தை வாங்கிய நேரத்தில் கொஞ்சம் கதையை கேட்கவாவது நேரத்தை ஒதுக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசுதான் இருந்தாராம். அவர் மிகவும் பிஸியாக இருந்ததனால் அடிக்கடி வந்து என்னால் இந்தப் படத்தில் பணியாற்ற முடியாது. அதனால் எல்லா ஃபைட் சீன்களையும் ஒரேடியாக முடித்து விடுகிறேன் என்று கூறி கிட்டத்தட்ட சண்டை காட்சிகளை மட்டும் 36 நாள்கள் எடுத்தாராம். அதுதான் படத்தில் பிரதிபலித்திருக்கிறது.
உஷாரான ஜெயம் ரவி
மேலும் இந்தப் படத்திற்கு முன்பாக ஜெயம் ரவி முத்தையாவிடம் ‘ நான் சாக்லேட் பாயாகவே நடித்து வருகிறேன், ஒரு கிராமத்து பின்னனியில் படம் நடிக்க வேண்டும், ஆகவே என்னை வைத்து எதாவது படத்தை எடுங்கள்’ என்று கூறினாராம். ஆனால் இந்த காதர் பாட்சாவை பார்த்த பிறகு ஜெயம் ரவி முடிவை மாற்றியிருப்பார் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : எத்தன தடவதான் எஸ்கேப் ஆவ!.. சிம்புவுக்கு கிடுக்குப்பிடி போட்ட திரையுலகம்..
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…