ஜெயம் ரவிக்கும், தனுஷூக்கும் இடையே நடந்த விவகாரம்... விவகாரத்துக்கு இதுவும் காரணமா?

ADJR
பொதுவாகவே தம்பதியருக்குள் வாரிசு இல்லன்னா விவாகரத்து ஆகும். அல்லது சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிசாகி மனக்கசப்பு உண்டாகி விடும். அதுவும் இருக்கலாம். வாரிசே இல்லன்னாலும் சேர்ந்து வாழ்பவர்கள் பலர் இருக்காங்க. சின்ன சின்ன பிரச்சனைகளை பூதாகரமாக்க சில கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்களே குடும்பத்தைப் பிரிக்க பெரிய காரணமாக இருப்பாங்க. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து சில காரணங்களைப் பகிர்ந்துள்ளார். வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
பண்பட்ட மனிதர்களின் விவாகரத்து விவகாரம் எப்படின்னா அவர்களது தொழில்முறை வாழ்க்கையுடன் சொந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்துவது ஒரு காரணமாகி விடுகிறது. ஜெயம் ரவி விவாகரத்து மற்ற விஷயங்களுக்காக அல்ல. இவர்களுக்குள் பிரதான காரணம் பொருளாதாரம். அவருக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவின. கதைகள் தேர்வு செய்யும் விதம். சூர்யா, விஜய் எல்லாம் கேரியரில் டெவலப் ஆகி எங்கேயோ போயிட்டாங்க.
Also read: டைவர்சா? எப்போ? ஜெயம் ரவி அறிக்கைக்கு ஆர்த்தி வெளியிட்ட அதிரடி பதில்!.. செம டிவிஸ்டா இருக்கே..
ஜெயம் ரவி நல்ல ஸ்டார் வேல்யு வந்த பிறகு தான் லவ் பண்றாங்க. அதனால அவர்களுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கிக்க முடியலை. கணவனுக்கு பொருளாதார சரிவு வரும்போது தாங்கிப் பிடிக்கணும். அது தான் நல்ல மனைவிக்கு அழகு. மற்றவர்களின் நலன் கருதி விவாகரத்து என சொல்லும் ஜெயம் ரவி யாரைச் சொல்றாருன்னா அவரது மனைவி மற்றும் மாமியாரைத் தான் என்று நான் நினைக்கிறேன்.
இங்கு தான் சிக்கல். கணவன் மனைவி கூடவும் பேலன்ஸ் பண்ணனும். அவரது சைடும் பேலன்ஸ் பண்ணனும். இங்கு தான் அவருக்கு சிக்கல். மாமியாரே ரவி வந்து எனக்கு மருமகன் அல்ல. மகன் என்று தெரிவித்துள்ளார். ஜெயம் ரவியின் வெற்றியைக் கொண்டாட நிறைய பேர் வந்தாங்க. ஆனா தோல்வி என்றதும் முழுக்க முழுக்க அவர் மீது பழி விழுகிறது.
திருமணமானதும் முழுக்க முழுக்க கதை தேர்வு பொறுப்பை மாமியார் தான் பார்த்தாராம். ஆரம்ப காலத்தில் அப்பாவும், அண்ணனும் தான் இதைக் கவனித்து வந்தார்கள். அதனால் தான் சொல்றேன். பிரைவேட் லைஃபையும், புரொபசனல் லைஃபையும் ஒண்ணா சேர்க்கக்கூடாது. பிரச்சனையே அங்கு தான் உருவாகிறது.
ஜெயம் ரவி மனைவி ஆர்த்திக்கும், தனுஷூக்கும் ஒரு பார்ட்டியில் சண்டை வந்தது. அவர் காரணமான்னு கேட்டபோது பொதுவாகவே விவாகரத்துன்னா தனுஷ் தான் காரணம்னு சொல்றாங்க. ஆனா இது நடக்கறதுக்கு வேணா வாய்ப்பு இருக்கு. ஆனா பெரும்பான்மையான காரணம்னா படங்களோட தோல்வி தான். சினிமாவைப் பொருத்தவரை பிசியாகவே இருக்கணும்.
ஜெயம் ரவிக்குப் படங்கள் இல்ல. அடுத்தடுத்து தோல்வி. இந்த இடத்துல அவரோட பேமிலி சப்போர்ட் பண்ணனும். பொதுவாக பெண்களால தான் பிரச்சனை. அடிஷனல் கேரக்டர்கள் தான் காரணம். கணவன், மனைவிக்கு நடுவில் இன்னொரு கேரக்டர் வரவே கூடாது.

JRA
அப்படி வந்ததுன்னா விரிசல் ஆகிவிடும். அது வராதவாறு பார்த்துக்கணும். காற்று கூட உள்ளே நுழையக்கூடாது. அப்படி இருந்தா எந்த தனுஷூம் வர முடியாது. உறவுகளே வரமுடியாது. அப்புறம் எப்படி 3வது மனிதன் வருவான்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.