கோவா டிரிப் பாடகியிடம் மடங்கிய ஜெயம் ரவி… இதனால்தான் ஆர்த்தி ரவியிடம் விவாகரத்தா?
JayamRavi: சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி ஒரிரு நாளில் ரசிகர்களின் கண்ணீர் பதிவுடன் முடிந்துவிடும். ஆனால் ஜெயம்ரவி விவாகரத்து செய்து மட்டும் வெடித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்த பிரச்னைக்கு பாடகி ஒருவர் காரணமாக கூறப்படுகிறார்.
ஜெயம் ரவி கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் வைத்திருந்தவர். இதுவரை கிசுகிசுவில் கூட சிக்காமல் இருந்து வந்தவர். தற்போது ஒரு விவாகரத்து செய்தியால் மொத்த பரபரப்புக்கும் காரணமாகி இருக்கிறார். கடந்த வாரம் திடீரென ஜெயம்ரவி விவாகரத்தை அறிவித்தார். ஆனால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி எந்த பதிவும் போடாமல் இருந்தார்.
இதையும் படிங்க: தனுஷ் நல்லவரு தா… ஆனா என்ன சேர்க்கைதா சரியில்ல… இது உலக மகா நடிப்பா இருக்கே…!
இரண்டு தினங்களில் அவர் தரப்பில் இருந்து இதில் எனக்கு உடன்பாடில்லை என பதில் வந்தது. என் கணவர் சுயநலத்துக்காக இப்படி செய்வதாகவும், என்னை பற்றி அவதூறு பேசாதீர்கள் எனவும் காட்டமாக அறிக்கையில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்து இருக்கிறது. ஜெயம் ரவி தன்னுடைய நண்பர்களுடன் கோவா செல்வது வழக்கமாம்.
அப்படி ஒரு கோவா ட்ரிப்பில் தான் பாடகி ஒருவரை சந்தித்துஇருக்கிறார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். கோவா பப்புகளில் பாடுபவர். ஆல்பம் சாங்கிலும் நடித்து இருக்கிறார். தமிழில் பிரபல நடிகர் தயாரித்த ஆல்பமிலும் பாடி இருக்கிறார். ஏற்கனவே திருமணமானவர். இருவருக்கும் நட்பு உருவானதாம். அந்த நட்பால் திசை திரும்பி இருக்கிறார் ஜெயம்ரவி. திருமணநாளுக்கு கூட குடும்பத்துடன் இல்லாமல் கோவா சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: அனிருத்திடம் அஜித் சொன்ன விஷயம்! அதான் விடாமுயற்சி ரிலீஸாக இவ்ளோ லேட்டா?
இந்த நட்பு விவகாரம் வெளியில் தெரிந்தபின்னரே ஆர்த்தி கடுப்பில் இன்ஸ்டாவில் இருந்து ஜோடி போட்டோக்களை நீக்கி இருக்கிறார். இருந்தும் கணவனை விடமுடியாமல் பேச முயற்சி செய்து தோற்று இருக்கிறாராம். ஆர்த்தி கவலையில் இருக்க ஜெயம்ரவி கோவாவில் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்த்தி குடும்பம் மற்றும் ஜெயம்ரவி குடும்பம் இணைந்து இருவரை சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ரவி கோவா தோழி பேச்சை கேட்டு ஆடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் சர்ச்சை வெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.