கோவாவில் பாடகியுடன் மூணு மாசமா இருந்த ஜெயம் ரவி… என்ன காரணம்னு தெரியுதா?

Published on: September 19, 2024
JR Singer
---Advertisement---

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்குக் காரணம் என்ன? ஜெயம் ரவிக்கு ஆர்த்தி மீது ஏன் இவ்வளவு வெறுப்பு வந்தது என்று சொல்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற காதலியுடன் 3 மாதமாக ஜெயம் ரவி இருந்ததாகச் சொல்கிறார்கள் என்பது உண்மையா என நிருபர் கேட்கிறார். அதற்கு அந்தணன் சொன்ன பதில் இதுதான்.

Also read: கோலிவுட்டின் முதல் ஹீரோ அஜித்தான்! மதுபாலா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

ஆர்த்தி அப்பப்போ ரவி மீது சந்தேகப்பட்டாங்கங்கறது தான் உண்மை. ஆனா அது ஏன் வந்ததுன்னா அதுக்குக் காரணம் இந்தத் தகவல் தான். கிட்டத்தட்ட 3 மாசமா கோவாவில் தான் இருந்தார் ஜெயம் ரவி.

அவங்க வீட்டுல இருந்து அவரைத் தொடர்பு கொள்வதற்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. எப்பவாவது தான் வீட்டுக்கு வருவார். அதுவும் ஆர்த்தி பத்திப் பேசுனா சண்டை போட்டுட்டுப் போயிடுவாரு.

இல்லறம்னாலே நிறைய பிரச்சனைகள் இருக்கும். சண்டைகள் வரும். இது எப்பவுமே தொடருத விஷயம் கிடையாது. மனைவியை சமரசப்படுத்துற கட்டத்துக்கு ஜெயம் ரவி போகலைங்கறது தான் தெரியுது. வீட்டோட மாப்பிள்ளைன்னு வச்சிருந்தா கூட எங்கேயோ ஒரு இடத்தில் நெருடல் வந்துடும். அவங்க குடும்பத்து மேல வெறுப்பு வருது. ஆர்த்தியோட செலவும் இதற்குக் காரணம்.

JRAR
JRAR

ஆனா ஜெயம் ரவிக்கு ஆர்த்தி மேல ஏன் இவ்வளவு வெறுப்பு வந்ததுன்னா சந்தேகப்படுதல், செலவு, வீட்டோடு மாப்பிள்ளையில் வரும் நெருக்கடி எல்லாம் சேரும்போது எங்கேயாவது ரிலாக்ஸ் கிடைக்காதான்னு பார்த்துருப்பாரு போல. இந்த சம்பவமே இதன் காரணமாகத் தான் நடந்துருக்கும்னு தெரியுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சோசியல் மீடியாவுல இருக்குறவங்க தான் தனுஷ் தான் விவாகரத்து எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க. ஒரு காலகட்டத்தில் தனுஷ் தெரியாமல் செய்த தவறு தான் அது.

ஆனா இன்னைக்கு அவர் ஓடிக்கிட்டு இருக்காரு. அவரு இந்த மாதிரி சீப்பான வேலைகள செய்ய மாட்டாரு. ஒரு கால கட்டத்தில் இருந்தது. இன்னைக்கு அப்படி இல்ல என்றும் அந்தணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.