Connect with us

Cinema History

என்னோட பெரிய வருத்தத்தைப் பொன்னியின் செல்வன் நிறைவேற்றிருக்கு…நெகிழ்கிறார் ஜெயம் ரவி

சினிமாவை நேசிப்பவர்கள் பலர் உண்டு. சினிமாவைக் காதலிப்பவர்களும் உண்டு. சினிமாவை ரசிப்பவர்களும் உண்டு. ஆனால் சினிமாவை முறையாகக் கற்றுக்கொண்டு அதன் வழியில் நடப்பவர்கள் வெகுசிலர் தான். அவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் தனது திரையுலக அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

நான் கில்லியோட 100வது நாள் விழாவில் Nடையில சொன்னேன். ஹீரோன்னா இப்படி இருக்கணும். அப்படி இருக்கணும். டான்ஸ் பண்ணனும். பைட் பண்ணனும். ரொம்ப வரு
ஷத்துக்கு அப்புறம் நான் இதையும் பண்ணுவேன். அதையும் பண்ணுவேன்னு சொல்வாரு. விஜய்க்கிட்ட ஒரு நெகடிவ் எனர்ஜியே இருக்காது. நல்லா ஜாலி டைப். நானும் அப்படித்தான். எப்பவும் பாசிடிவா என்கரேஜிங்கா பேசிக்கிட்டே இருப்பேன்.

விஜய் அண்ணா ஜெனரலா பேசும்போது சொன்னாரு. உங்க அண்ணனோட ஸ்டைல் ஆப் மேக்கிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பப்பாங்கான படம் எடுப்பவர்னு சொன்னார். விஜய் அண்ணா பேமிலி ஹீரோ. அது உலகத்துக்கே தெரியும்.

Jayam Ravi 4

உங்க கைன்ட் ஆப் பிலிம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாமெல்லாம் சேர்ந்து படம் பண்ணுவோம்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப ஹேப்பியாயிடுச்சி. உடனே நான் எங்க அண்ணன்கிட்ட சொன்னேன். அதுக்கு அவரு சொன்னாரு. இதுக்கு மேல கிடையவே கிடையாது. அவரு ஒரு ஆல் இன் ஆல் ஹீரோ. அவருக்கு நல்லபடியா ஒரு படம் பண்ணுன்னு சொன்னேன். அது வந்து கரெக்டா வேலாயுதம் அமைஞ்சது.

நானும் ஸ்கிரிப்ட்ல எல்லாம் அப்படியே உட்கார்ந்து… என்னையும் கூப்பிடுவாங்க. அப்புறம் சொல்வாங்க. இவருகூட ஸ்கிரிப்ட்ல எல்லாம் உட்கார்ந் தாருன்னு…அப்படி எல்லாம் இல்லைங்க. நாலுவார்த்தை எனக்குத் தெரிஞ்சதை சொல்வேன். அசிஸ்டண்ட் டைரக்டருல்ல. இதைக்கூட செய்யலன்னா எப்படி?

நான் வந்து எங்க வீட்ல 3வது குழந்தை. முதல் குழந்தையை அம்மா அப்பா பார்த்துக்குவாங்க. 2வது குழந்தையை முதல் குழந்தை பார்த்துக்கும். 3வது குழந்தையை மொத்தமா எல்லாரும் சேர்த்து பார்த்துப்பாங்க. அதனால செல்லம் ஓவராக் கொடுப்பாங்க. அடி வாங்குனதில்ல.

அடி வாங்குறதுக்கு முன்னாடியே நாம ஆக்டிங்லாம் போட்டு சமாளிச்சிடுவோம். ஸ்கூல்ல வந்து எப்படின்னா நமக்கு கொஞ்சம் பரதநாட்டியம்லாம் தெரியும்ல. 12 வயசிலயே பரதநாட்டியம் அரங்கேற்றம் பண்ணிட்டேன். நாலு வயசில இருந்தேக் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். மாதா மாதம் ஒரு பிரைஸ் வாங்கிட்டு வந்துடுவேன்.

சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சது. வந்ததுக்கு அப்புறம் நான் அடாப்டாயிட்டேன். செய்யிறத கத்துக்கிட்டத ஒழுங்காக் கத்துக்கிட்டோம்னா அது லைப்ல என்னைக்குமே ஹெல்பாகும். அதனால நான் கத்துக்கிட்டதை ஒழுங்காக் கத்துக்கிட்டேன். இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன். இன்னும் கத்துப்பேன்.

எங்க அண்ணன் டிஎப்டி பண்ணினாரு. வீடியோ ஆல்பம் பண்ணிருக்காரு. அப்போ அவருக்கு நான் தான் மாடல். சினிமா வந்து ஒரு பேமிலி மாதிரி. பேமிலி நல்லா இருந்தா தான் நல்ல பேமிலின்னு சொல்வாங்க. அதுல வந்து 24 கிராப்ட் இருக்கு. எல்லாமே ஒண்ணா சேர்ந்து தான் செயல்படும். தனித்தனியா செயல்பட்டா அது சினிமாவே கிடையாது.

Jayam Ravi 2

ஒரு படத்துல காஸ்டியூம் நல்லா இருக்குன்னு சொன்னா அது அசிங்கம்னு நினைப்பேன். ஆர்ட் நல்லாருக்குன்னு சொல்லக்கூடாது. சினிமா நல்லாருக்குன்னு சொல்லணும். ஒரு சமையல் நல்லாருக்குன்னா உப்பு கரெக்டா இருக்குன்னு சொல்ல மாட்டோம். அந்த மாதிரி சினிமாவ நான் வந்து ஒரு உணவா ஒரு உணர்வா தான் பார்க்குறேன். சோ அதுல டைரக்டர் தனி. ஆக்டர் தனின்னு கிடையாது.

பிரான்ஸ்ல வந்து லாஞ்ச் ஆன முதல் தமிழ்ப்படம். ரொம்ப பெருமையான விஷயம். எல்லாரும் ஒண்ணா போயிருந்தோம். ரகுமான் சார் எல்லாரும் வந்துருந்தாங்க. முதல்ல பீரியட் பிலிமா சுந்தர் சி இயக்கத்துல தான் நான் நடிச்சேன்.

அது ரொம்ப அருமையான ஸ்கிரிப்ட். ஏதோ ஒரு சில காரணங்களால படம் வரல. பெரிய வருத்தம் தான். அதுக்குப் பதில் பொன்னியின் செல்வன் கிடைச்சிருக்கு. அந்த வகையில ரொம்ப சந்தோஷம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top