×

ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ஜெயம் ரவியின் புதிய படம்... இனி எல்லாமே ஓடிடிதானா?...

 

ஜெயம் ரவியின் 25 ஆவது படமான பூமி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாது உறுதியாகியுள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் நபராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. லஷ்மண் இயக்கத்தில் ஏறகனவே ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களில் நடித்த ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் காரணமாக ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

இந்நிலையில் முடிந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியே இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News