பிளாப் கொடுத்தும் அதிக சம்பளம் கேட்ட ஜெயம் ரவி!.. வாய்ப்பை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. அந்த படத்தின் வெற்றியால் அப்படத்தின் தலைப்பு அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் 50 சதவீதம் வெற்றிப்படங்கள்தான்.

அதிலும் தனி ஒருவன், கோமாளி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்றது. பொன்னியின் செல்வன் வெற்றி ஜெயம் ரவிக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. அதில் பல படங்களை ஜெயம் ரவியின் மாமியாரே தயாரித்தார். எனவே, தற்போது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் ரவி நடிப்பதில்லை.

இதையும் படிங்க: அந்த படத்தை ரீமேக் பண்ணா நடிக்க நான் ரெடி!.. விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசையா?!..

பொன்னியின் செல்வனுக்கு பின் வெளியான அகிலன், சைரன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஊத்திகொண்டது. இதில், சைரன் படம் தயாரிப்பாளருக்கு மட்டும் லாபத்தை கொடுத்ததாகவும், படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு படம் நஷ்டத்தை கொடுத்தது எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு கதையை அவரின் சொல்லி படம் டேக் ஆப் ஆனது. ரவியின் மாமியேரே தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், 15 கோடி சம்பளம் வாங்கி வந்த ஜெயம் ரவி இனிமேல் எனது சம்பளம் 25 கோடி என சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியான மாமியார் அப்படத்திலிருந்து பின் வாங்கிவிட்டார்.

எனவே, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் சென்று அதே கதையை சொல்லி ஓகே செய்துவிட்டார் பாண்டியாரஜ். அதோடு, விஜய் சேதுபதிக்கு இந்த கதை பிடித்துப்போக அந்த கதையில் அவர் நடிக்கவிருக்கிறார். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற கிராமத்து ஹிட் படங்களை கொடுத்தவர் பாண்டிராஜ்.

தோல்விப்படங்களை கொடுத்தும் சம்பளத்தை ஏற்றி நல்ல கதைகளை ஜெயம் ரவி இழந்து வருகிறார் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், பல வருடங்களுக்கு பின் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மகாராஜா படம் ஹிட் அடித்திருப்பதால் இனிமேல் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story