Connect with us

latest news

ஜெயம் ரவியோட இந்த படமாவது தியேட்டர்ல பார்க்குற மாதிரி இருக்குதா?.. சைரன் விமர்சனம் இதோ!..

ஜெயம்ரவி நடிப்பில் வெளியான படங்கள் சமீபத்தில் ரசிகர்களுக்கு தலைவலியை கொடுத்து வந்த நிலையில், படத்தின் டைட்டிலே சைரன் என இரைச்சலைக் கொடுக்கும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதே, படம் எப்படி இருக்கும் என்கிற சந்தேகத்துடன் தான் படத்தைப் பார்க்க சென்ற அனைவரது மனநிலையும் இருந்தது.

ஜெயம் ரவி முதன்முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான தோற்றத்தில் இந்தப் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் காக்கி உடையில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என எதுவுமே முதல் இன்ப்ரஷனை கிரியேட் பண்ணாத நிலையில், அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் தனது திரைக்கதையை நம்பி இந்தப் படத்தை உருவாக்கியுள்ள நிலையில், ஜெயம் ரவி அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்தது படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா

பரோலில் வரும் திலகன் தனது மகளின் அன்பை பெற ஏங்குகிறார். சிறு வயது முதலே அப்பா தன்னைவிட்டு கொலைகாரன் என்கிற பட்டத்துடன் சிறையில் இருந்த நிலையில், அப்பாவே தேவை இல்லை என பதின் பருவ மகள் அவரை ஒதுக்கி தள்ளுகிறார்.

பரோலில் வரும் ஜெயம் ரவியுடன் பாதுகாப்புக்காக கூடவே திரியும் போலீஸ் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான மாவீரன் படத்திற்கு பிறகு அவரது ஒன்லைன் காமெடிகள் இந்தப் படத்தில் கச்சிதமாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் சைரன் சத்தமா ஒலித்ததா? இல்லை சங்கு ஊதியதா?.. இதோ ட்விட்டர் விமர்சனம்!

காஞ்சிபுரத்தில் கதை நடக்கிறது. கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக உள்ள ஏரியாவை சுற்றி அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அந்தக் கொலைகளை ஜெயம் ரவி தான் செய்திருப்பார் என சந்தேகப்பட்டு அவரை துரத்துகிறார். ஆனால், தான் எந்த கொலையையும் செய்யவில்லை என அப்பாவியாக நடித்து ஜெயம் ரவி அசத்துகிறார்.

அந்த கொலைகளை யார் செய்தார்கள், ஜெயம் ரவிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம், ஜெயம் ரவி தனது மகளுடன் சேர்ந்தாரா இல்லையா? குற்றவாளியை கீர்த்தி சுரேஷ் பிடித்தாரா இல்லையா? என திரைக்கதையை ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வச்சு கொண்டு போன விதம் தான் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வைக்கிறது. ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, யோகி பாபுவின் காமெடிக்காக இந்த படத்தை தாராளமாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம். கதையில் எந்த புதுமையும் இல்லை என்றாலும், எடுத்துக் கொண்ட விஷயத்தை இயக்குநர் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில் தொய்வுகளும் இருக்கத்தான் செய்கிறது.

சைரன் – சத்தமாவே ஒலிக்குது!

ரேட்டிங் – 3.25

google news
Continue Reading

More in latest news

To Top