ஒரே நேரத்தில் மூணு… டாப் ஹீரோவில் இருந்து இயக்குனராக மாறும் ஜெயம்ரவி… முதல் பட நாயகனுக்கு அட்வான்ஸ் 500ரூபாயாம்..?

by Akhilan |
ஒரே நேரத்தில் மூணு… டாப் ஹீரோவில் இருந்து இயக்குனராக மாறும் ஜெயம்ரவி… முதல் பட நாயகனுக்கு அட்வான்ஸ் 500ரூபாயாம்..?
X

JayamRavi: நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய சினிமா கேரியரில் வெற்றிகரமாக அடுத்த அடியை எடுத்து வைத்து இருக்கிறார். அதன்படி அவர் அடுத்து ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் ஜெயம் ரவி. முதல் படமே சூப்பர்ஹிட்டானது. அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படமும் மாஸ் ஹிட் கொடுத்தது. இதனால் மினிமம் கியாரண்டி நடிகராக அறியப்பட்டார். தொடர் வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படிங்க: அட அந்த மாஸ் ஹிட் படத்தின் மூன்றாம் பாகமா? கவினை களமிறக்க திட்டம் தீட்டும் இயக்குனர்… வேற லெவல்…

சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தில் மெயின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த இறைவன், அகிலன் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய் அளவில் தோல்வியை தழுவியது. மேலும், சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படம் நல்ல ரீச்சை கொடுத்து இருக்கிறது.

இதை தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, தனி ஒருவன் 2, தக் லைஃப், கிரித்திகாவின் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய அடுத்தக்கட்டமாக சினிமா இயக்கும் முடிவில் இருக்கிறாராம். அதுவும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை கைவசம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: எங்கள காப்பாத்திக்க ஒரே வழி.. இப்படி இறங்கிட்டாங்களே? வீடியோவை போட்டு ஷாக் கொடுத்த நயன்

இதில் அவர் இயக்கத்தில் முதல் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவை லீட் ரோலில் நடிக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் அவருக்கு 500ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். சைரன் படத்தினை இயக்கிய ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இரண்டாம் படத்தில் ஜெயம் ரவியே ஹீரோவாக நடித்து இயக்குகிறார். மூன்றாம் படத்தில் அவருடன் இன்னொரு ஹீரோவையோ அல்லது இரண்டு முன்னணி நடிகர்களையோ வைத்து டபுள் ஹீரோ சப்ஜக்டில் ஒரு படத்தினை இயக்க முடிவெடுத்து இருக்கின்றனர். இந்த வருடத்தில் பாதியில் இருந்து இதற்கான அறிவிப்புகளும், அடுத்தக்கட்ட வேலைகளும் தொடங்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story