பொன்னியின் செல்வனாக ஜொலிச்சாலும் நாங்க அத மறக்கவே மாட்டோம்!.. ஜெயம் ரவிக்கு தொடரும் சிக்கல்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. துடுக்கான நடிப்பால் அனைவரையும் ஈர்த்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஜெயம் ரவி. தொடர்ந்து பல ஹிட் மாஸான படங்களை கொடுத்தாலும் பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாகவே வாழ்ந்திருந்தார்.
அது அவரின் வெற்றி மட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வனில் நடித்த அத்தனை நடிகர்களின் வெற்றியாகவே கருதப்படுகிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பில் நடித்த ஜெயம் ரவிக்கும் ஒரு சிக்கல் இருந்து கொண்டே வருகிறதாம்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆருக்கு கிடைத்த தேசிய விருது… எந்த படத்துக்கு தெரியுமா? ஆனால், சிவாஜிக்கு ஏன் கிடைக்கவில்லை…
அதாவது இவரின் நடிப்பில் கடைசியாக வந்த படமான பூமி படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. கல்யாண் இயக்கத்தில் அமைந்த பூமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. பொன்னியின் செல்வன் டம் மிகப்பெரிய வெற்றிபடமாக இருந்தாலும் தனிப்பட்ட ஜெயம் ரவியின் வெற்றி இல்லை.
அதனால் அவர் அடுத்ததாக நடித்த அகிலன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த படத்தை யாரும் விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை என்பது தான் உண்மை. ஏனெனில் அவரின் பூமி படத்தின் தோல்விதான் காரணமாம்.
இந்த காரணத்தால் தான் அகிலன் படம் ரிலீஸாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறதாம். இந்த நிலையில் நயனுடன் சேர்ந்து அடுத்ததாக இறைவி என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.