பிரம்மாண்ட வரலாற்று படத்தில் இருந்து விலகும் ஜெயம் ரவி… அப்போ ராஜாவா யார்ப்பா நடிக்கிறது??

Jayam Ravi
ஜெயம் ரவி தற்போது “இறைவன்”, “சைரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி நடித்த “அகிலன்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அந்த பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Jayam Ravi
கடந்த 2018 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான திரைப்படம் “சங்கமித்ரா”. இதில் ஜெயம் ரவி, ஆர்யா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், திசா படானி, ஜாக்கி செராஃப், சமீரா ரெட்டி, ஆகிய பலரும் நடிப்பதாக ஒப்பந்தமானார்கள். இத்திரைப்படம் வரலாற்றுத் திரைப்படம் என்பதால் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகயிருந்தது. எனினும் சில காரணங்களால் இத்திரைப்படம் டிராப் ஆனது.

Sangamithra
இந்த நிலையில் சமீபத்தில் லைகா நிறுவனம் “சங்கமித்ரா” திரைப்படத்தை உருவாக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இது குறித்து சுந்தர் சி, லைகா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்தால் ஹெச்.வினோத்துக்கு வந்த சிக்கல்… சைக்கிள் கேப்ல பெரிய நடிகரின் வாய்ப்பை கவ்விட்டு போயிட்டாரே!!

Jayam Ravi
எனினும் இத்திரைப்படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளதாக ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தற்போது பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இத்திரைப்படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.