“எல்லா சீன்லயும் ஒரே மாதிரியே ரியாக்சன் கொடுக்குறாரே”… தெலுங்கு சூப்பர் ஸ்டாரை கலாய்த்த ஜெயம் ரவி??

Mahesh Babu and Jayam Ravi
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். பின்னாளில் ராஜ ராஜ சோழனாக அறியப்பட்ட அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் மிகவும் மிடுக்காக தோற்றமளித்தார் ஜெயம் ரவி. அவரின் நடையும் பாவனையும் ஒரு சோழ இளவரசனை கண்முன் கொண்டு வந்திருந்தது.

Jayam Ravi
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தபோது, இணையத்தில் பலரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் பொருந்துவாரா? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அந்த சந்தேகங்களை எல்லாம் தவிடுபொடியாக்குவது போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் ஜெயம் ரவி தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை குறித்து சீயான் விக்ரம் மிகவும் நசைச்சுவையாக பகிர்ந்திருந்தார்.

Jayam Ravi
அதாவது ஒரு நாள் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஜெயம் ரவி “ஒரு நடிகர் காதல் காட்சியாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் காட்சியாக இருந்தாலும் சரி, ஆக்சன் காட்சியாக இருந்தாலும் சரி, எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியே ரியாக்சன் கொடுக்குறாரே, எப்படிங்க?” என ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயரை சொல்லி கேட்டிருக்கிறார்.
அதற்கு விக்ரம் “அவரை எனக்கு நன்றாக தெரியும் , அவர் என் நண்பர்தான்,” என கூறினாராம். உடனே ஜெயம் ரவி “அதான் எப்படிங்க??” என கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: “நீங்க இப்போ அழுதே ஆகனும்”… கண்டிஷன் போட்ட மணி ரத்னம்… சத்தம் போட்டு சிரித்த சரண்யா…

Mahesh Babu
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வர, இணையவாசிகள் பலரும் “தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை குறித்துத்தான் ஜெயம் ரவி அவ்வாறு கேட்டுள்ளார்” என அந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.