மாமியாரை பற்றி குறை கூற காத்திருக்கும் இயக்குனர்.! ஜெயம் ரவி கேட்டுப்பாரா?!

by Manikandan |   ( Updated:2022-01-16 09:20:13  )
மாமியாரை பற்றி குறை கூற காத்திருக்கும் இயக்குனர்.! ஜெயம் ரவி கேட்டுப்பாரா?!
X

ஜெயம் ரவி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அடங்கமறு. இந்த திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா, ஹோம் மூவீ மேக்கர்ஸ் சார்பாக தயாரித்திருந்தார். கார்த்திக் தங்கவேலு எனும் அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படமாகவும் உருவாகி இருந்ததால் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமை நல்ல விலைக்கு சென்றுள்ளது.

வழக்கமாக ரீமேக் உரிமை விற்கபட்டால் அதில் குறிப்பிட்ட தொகை இயக்குனருக்கு கொடுக்கப்பட வேண்டும். இது கோலிவுட்டில் வழக்கமாக இருக்கும் நடைமுறை. ஆனால், ரீமேக் உரிமை அடங்குமறு திரைப்படத்திற்கு விற்கப்பட்டது தற்போது வரை இயக்குனர் கார்த்திக் தங்கவேலுக்கு எந்த தொகையும் கொடுக்கப்படவில்லையாம்.

இதனால் கடுப்பான இயக்குனர் கார்த்திக் தங்கவேலு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என யோசித்து வருகிறாராம். தனது பட ஹீரோ ஜெயம் ரவியிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கூறலாமா அல்லது இயக்குனர் சங்கத்தில் புகார் அளிக்கலாமா என யோசித்து வருகிறாராம்.

Next Story