நான் சொன்னா கேக்குற ஆளா இயக்குனர்!.. விரக்தியடைந்த ஜெயம் ரவி.. ஆறுதல் கூறிய சிம்பு!

by Rajkumar |   ( Updated:2023-05-02 04:14:30  )
நான் சொன்னா கேக்குற ஆளா இயக்குனர்!.. விரக்தியடைந்த ஜெயம் ரவி.. ஆறுதல் கூறிய சிம்பு!
X

தமிழில் ஜெயம் ரவி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு முதல் படமே பெரும் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்தை இயக்கும்போது க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகளை தயக்கத்துடனேயே வைத்துள்ளனர் படக்குழுவினர்.

ஏனெனில் படத்தை பொறுத்தவரை ஜெயம் ரவி சாதுவான கதாபாத்திரம், அவர் சண்டையிடுவதை மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்கிற ஐயம் இருந்தது. ஆனால் அந்த க்ளைமேக்ஸ் காட்சிதான் படத்தின் வெற்றிக்கே முக்கிய காரணமாக அமைந்தது.

jayam ravi

அதனை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பிறகு வந்த எம்.குமரன் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து பல படங்களில் நடித்துவிட்டார் ஜெயம்ரவி. தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் முதலில் ஆதித்த கரிகாலனாக சிம்புதான் நடிக்க இருந்தது. ஆனால் அதற்கு ஜெயம் ரவி ஒப்புக்கொள்ளாததால் இயக்குனர் சிம்புவை நடிக்க வைக்கவில்லை என்கிற பேச்சு இருந்தது. இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம் ரவியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி. முதலில் அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை. அதை தாண்டி நாங்கள் சொல்வதை எல்லாம் இயக்குனர் மணிரத்னம் கேட்கமாட்டார். அவர் சொல்வது போலதான் நாங்கள் நடிக்க வேண்டும். இந்த புரளி அதிகமாக பரவியப்போது சிம்புவே எனக்கு போன் செய்தார். இவர்கள் சொல்வதை கண்டுக்கொள்ள வேண்டாம் என எனக்கு ஆறுதல் கூறினார் என ஜெயம் ரவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்- மாஸ் ஹிட் ஆன படத்தை தரகுறைவாக பேசிய பாலச்சந்தர்… ஏன் தெரியுமா?

Next Story