சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம் ரவி போட்ட 4 கண்டிஷன்கள்!.. செம டெரரா இருக்காரே!….
Jayam ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இவரின் அப்பா மோகன் பல படங்களுக்கும் எடிட்டிங் செய்தவர். இவரின் அண்ணன் ராஜா சினிமா இயக்குனர். எனவே, சினிமாவில் சுலபமாக நுழைந்தவர் என்றாலும் தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் ரவி. ரொமான்ஸ், சண்டை, நடனம் என எல்லாவற்றிலும் அசத்தலாக நடிப்பார். விஜய் போல ஒரு மாஸ் ஹீரோ இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி உள்ள ஒரு நடிகராக கோலிவுட்டில் வலம் […]
Jayam ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இவரின் அப்பா மோகன் பல படங்களுக்கும் எடிட்டிங் செய்தவர். இவரின் அண்ணன் ராஜா சினிமா இயக்குனர். எனவே, சினிமாவில் சுலபமாக நுழைந்தவர் என்றாலும் தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் ரவி.
ரொமான்ஸ், சண்டை, நடனம் என எல்லாவற்றிலும் அசத்தலாக நடிப்பார். விஜய் போல ஒரு மாஸ் ஹீரோ இல்லை என்றாலும் மினிமம் கேரண்டி உள்ள ஒரு நடிகராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனி ஒருவன், கோமாளி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

எந்த சர்ச்சை மற்றும் கிசுகிசுவில் சிக்காத சில நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். கடந்த சில வருடங்களாக தனது மாமியாரின் தயாரிப்பில் சில படங்களில் நடித்தார். அதில் சில பிரச்சனை ஏற்பட்டது. அதோடு, மனைவி ஆர்த்தியுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்தார்.
இப்போது மும்பையில் தனக்கென ஒரு அலுவலகம் திறந்து அங்கிருந்து சினிமா தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். அவரின் நடிப்பில் உருவான பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. இப்போது ஜெனி, காதலிக்க நேரமில்லை என்கிற 2 படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ஜெயம் ரவி. ஒருபக்கம், சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு ஜெயம் ரவிக்கு வந்துள்ளது. இந்நிலையில்தான், இந்த படத்தில் நடிக்க 4 கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம் ஜெயம் ரவி.

நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும், சிவகார்த்திகேயன் என்னை அடிப்பது போலவும், அவரிடம் நான் அடிவாங்குவது போலவும் காட்சிகள் இருக்கக் கூடாது, கால்ஷீட் விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது, பட விளம்பரங்களில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறாராம்.
சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில்தான் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவிருக்கிறார். விஷால் நடிக்க மறுத்த அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி சம்மதித்திருந்தாலும் இப்படி சில கண்டிஷன்களை போட்டிருக்கிறார். எனவே, படக்குழு என்ன முடிவு செய்யும் என்பது தெரியவில்லை..
இதையும் படிங்க: Pushpa2: மாற்றப்பட்ட புஷ்பா2 இசையமைப்பாளர்… ட்ரெண்ட்டான ஆளுதான்… வைப் பண்ணிடுவாரு!..












