துல்கர் போனா என்ன? அந்த மலையாள நடிகருக்கு கொக்கி போடுங்க… கறார் காட்டும் கமல்ஹாசன்…
Thug life: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இருந்து இளம் நாயகர்களான துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி இருக்கும் நிலையில் அவர்களுக்கான மாற்று நடிகர்களின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கமல்ஹாசன் இந்தியன் படத்தினை முடித்துக்கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் இணைய இருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!
ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போவதால் நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கும் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் கால்ஷூட் பிரச்னை காரணமாக இப்படத்தில் இருந்து விலகிவிட்டனர். ஆனால் திரிஷா இப்படத்தின் ஷூட்டிங்கினை ஏற்கனவே தொடங்கிவிட்டாராம்.
இதில் துல்கர் கேரக்டருக்கான மாற்று நடிகராக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து அது வெற்றிக்கரமாக முடிந்து இருக்கிறதாம். சிம்புவின் 48வது படத்தினை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் அந்த படத்தின் ஷூட்டிங்கை இந்த வருடத்தின் கடைசிக்கு தள்ளி வைத்துவிட்டனராம். அதனால் சிம்பு இந்த படத்தில் நடிப்பதில் பிரச்னை இருக்காதாம்.
இதையும் படிங்க: காரில் போகும்போது இளையராஜா என்ன பாடல் கேட்பார்?!. சீக்ரெட் சொல்லும் இயக்குனர்!..