இப்படியே போனா பிரசாந்த் நிலமைதான் ஜெயம் ரவிக்கும்!.. என்னப்பா சொல்றீங்க!…

Published on: September 12, 2024
jayam ravi
---Advertisement---

தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள ஒரு நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. துவக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு வியாபாரத்தை சினிமாவில் உருவாக்கினார். நன்றாக நடனம் ஆடுவார், சண்டை போடுவார்.

பார்ப்பதற்கும் ஹேண்ட்சம்மாக இருப்பதால் இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். ஜெயம் ரவி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தபோது அவருடன் டேட்டிங் போக பல இளம் பெண்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருந்தவர் ஜெயம் ரவி.

இதையும் படிங்க: மீண்டுமா? தனுஷ் இயக்கத்தில் இத்தனை டாப் பிரபலங்களா? பரபர அப்டேட்

ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 14 வருடங்கள் ஆகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார் ஜெயம் ரவி. ‘இது தனிப்பட்ட முடிவு இல்லை. என் குடும்பம் சார்ந்த முடிவு’ என சொல்லி இருக்கிறார் ஜெயம் ரவி.

ஆனால், ‘அது ரவி மட்டுமே எடுத்த முடிவு. அவரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. என்னிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல் எனக்கே தெரியாமல் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். நானும் குழந்தைகளும் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறோம்’ என சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார் ஆர்த்தி.

ஜெயம் ரவி – ஆர்த்தியின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதை திரையுலகினர் மட்டுமல்ல. ரசிகர்களும் இதை விரும்பவில்லை. ஜெயம் ரவி இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார். அவரின் செல்போன் அணைக்கப்பட்டிருக்கிறது. சினிமா உலகை பொறுத்தவரை சொந்த வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களின் கேரியரை காலி செய்துவிடும்.

Jayamravi_aarthi

நடிகர் பிரசாந்த் கூட அப்படித்தான் தனது கேரியரை இழந்தார். விவாகரத்து எனில் அது தொடர்பான விசாரணைக்கு அடிக்கடி நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அதை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து செய்தியாக போடுவார்கள். இது ஜெயம் ரவி மீதான இமேஜை காலி செய்யும். பெண் ரசிகைகளுக்கு ரவி மீது ஒரு வெறுப்பும் ஏற்படும். இப்படி பல நடிகர்களுக்கும் நடந்திருக்கிறது.

எனவே, ஜெயம் ரவி அடுத்த பிரசாந்த் ஆகிவிடாமல் இது தொடர்பாக குடும்பத்துடனும், ஆர்த்தியுடனும் பேசி, கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாக இருக்கிறது.

இதையும் படிங்க: செல்போன் சுவிட்ச் ஆப்! நாட் ரீச்சபிள்.. எங்கே போனார் ஜெயம் ரவி? ஷாக்கிங் ரிப்போர்ட்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.