Categories: Cinema News latest news

1000 ஸ்க்ரீன்ல வெளியான ஜெயம் ரவியின் சைரன்!.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிச்சா?..

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சைரன் 108 திரைப்படம் நேற்று வெளியானது.

உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ஜெயம் ரவி நடித்த சைரன் படம் திரையிடப்பட்டது. மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டரில் ரசிகர்களுடன் நடிகர் ஜெயம் ரவி படத்தை பார்த்து கொண்டாடினார்.

இதையும் படிங்க: கேப்டனை போல் பல இயக்குனர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த முரளி! அதில் ஒரு சம்பவம் இதோ

படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபீஸில் எந்த அளவுக்கு படம் பெர்ஃபார்ம் பண்ணுது என்று பார்த்தால் ஜெயம் ரவிக்கு பெரிய ஃபேன் பேஸ் இல்லாதது வெளிப்படையாக தெரிகிறது.

கடந்தாண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வச்சு செய்த நிலையில் சைவன் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் முதல் நாள் ஆர்வம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வசூலை சைரன் திரைப்படம் பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: குட்டகவுனில் குனிஞ்சு விளையாடும் பிக் பாஸ் பிரபலம்!.. வீடியோவை பார்த்து கழுத்து சுளுக்கிய ஃபேன்ஸ்!

சனி மற்றும் ஞாயிறு படம் பிக்கப் ஆனால், ஓரளவு வசூல் எட்டும் என்று தெரிகிறது. நடிகர் ஜெயம் ரவியின் சம்பளம் மட்டுமே 14 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் நாள் வசூல் இந்த அளவுக்கு மோசமாக இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷின் சம்பளம் அளவுக்குத்தான் படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

Published by
Saranya M