Categories: latest news

காலை வாரிய பிரதர்!.. விட்டத புடிச்சிருவாரா ஜெயம் ரவி?!.. காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் அப்டேட்!…

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. தனது சினிமா கெரியரில் தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து ஹிட்  கொடுத்து வந்த இவர் சமீப நாட்களாக தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரதர்.

இதையும் படிங்க: நடிகையிடம் புலி!.. அப்பாவிடம் பூனை!.. எந்த சினிமா ஜோடியை சொல்கிறார் சாய்ரா பானு வக்கீல்?..

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் போன்ற 3 திரைப்படங்கள் வெளியான நிலையில் அமரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து ப்ளடி பெக்கர் திரைப்படம் போட்ட படத்தை எடுத்த அளவிற்காவது வசூலை கொடுத்தது.

ஆனால் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகின்றார் நடிகர் ஜெயம் ரவி. அடுத்ததாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.

மேலும் இப்படத்தில் வினய் ராய், யோகி பாபு, ஜான் கொக்கன், வினோதினி லால் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்கின்ற புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.

இதையும் படிங்க: திருப்பதியில் சந்தானம்.. லட்டு கொடுக்கப்போன ரசிகர்! சந்தானத்தின் ரியாக்‌ஷனை பாருங்க

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி ஜீனி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். பிரதர் திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை திரைப்படம் கட்டாயம் ஒரு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்கின்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றார் ஜெயம் ரவி.

ramya suresh

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago