எப்பவோ கேட்ட ஜெயம் ரவி!.. மறக்காமல் சம்பவம் செய்த கமல்ஹாசன்!.. அட இது தெரியாம போச்சே!.

Jayam Ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இந்த படம் மூலம் ரவி பிரபலமானதால் அந்த படத்தின் பெயர் அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் நஷ்டத்தை சந்திக்காமல் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவுக்கு லாபத்தை கொடுத்தது.

எனவே, ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம் வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல், ரவியின் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த தனி ஒருவன் திரைப்படமும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

இதையும் படிங்க: கமல் – மணிரத்னம் ‘தக் லைப்’ படத்தின் கதை இதுதானா? – ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

கடந்த சில வருடங்களாக அவரின் நடிப்பில் வெளியாக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை. அப்போதுதான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் அவருக்கு கை கொடுத்தது. அதேநேரம், சில நாட்களுக்கு முன்பு வெளியான இறைவன் படம் ரசிகர்களை கவரவில்லை.

அதேபோல், அந்த படத்திற்கு முன்பு வெளியான அகிலன் படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. ஆனாலும், ஜெயம் ரவியின் கையில் இப்போது 9 படங்கள் இருக்க்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு கமல்ஹாசன் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய ஜெயம் ரவி ‘கமல்சார் நடித்த ஆளவந்தான் படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்தேன்’.

இதையும் படிங்க: பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் கமல்!. அட நம்பவே முடியலையே!.

அது அவருக்கே தெரியாது. ஏனெனில், அவரை பார்த்தாலே நான் அந்த பக்கம் ஓடிவிடுவேன். நான் நடிக்கிறேன் எனில் அதற்கு 85 சதவீதம் காரணம் அவர்தான். அவர் இருக்கும் ஒரு மேடையில் விருது வாங்க வேண்டும் என நான் நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது’ என அவர் பேசினார்.

மேலும் ‘சார்.. நான் உங்களோட மிகப்பெரிய ரசிகன். எப்ப தேவை என்றாலும் என்னை கூப்பிடுங்கள். உங்க கூட இருக்கணும்னு ஆசை’ என பேசியிருந்தார். இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு வேடம் கொடுத்திருக்கிறார் கமல். எத்தனை படங்களில் நடித்தாலும் ஜெயம் ரவிக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு ஸ்பெஷல் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: நான் நடிச்சிருந்தா கூட இப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்க மாட்டேன்! நெப்போலியனை பார்த்து கமல் சொன்ன படம்

 

Related Articles

Next Story