அம்பானி ஸ்டைலில் ஜெயம் ரவிக்கு கிடைச்ச கிஃப்ட்! ஓடாத படத்துக்கே இப்படினா? மாஸ் பண்ணும் மாமியார்
Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. சமீபகாலமாக இவரின் படங்கள் சரிவர போகாத நிலையில் தற்போது கமலின் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு சார்மிங் ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி தனி ஒருவன், போகன் போன்ற படங்களின் மூலம் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
இவர் நடித்து கடைசியாக வெற்றிப்பெற்ற திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம்தான். அதுவும் மல்டி ஸ்டாரர் படமாகத்தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்தது. இவர் தனியாக ஹீரோவாக நடித்த எந்தப் படங்களும் சமீபகாலமாக சரி வர வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை.
இதையும் படிங்க: அட எனக்கே ஸ்கெட்ச்சா?… விஜய் செட்டை பார்த்து குழம்பிப் போன கே.பாலசந்தர்… ஷாக் தந்த இயக்குனர்…
இந்தப் படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார்தான் தயாரித்தார். இந்தப் படம் மட்டுமில்லாமல் ஜெயம்ரவியின் பெரும்பாலான படங்களை சுஜாதா விஜயகுமார்தான் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சுஜாதா விஜயகுமார் ஜெயம் ரவிக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். அந்த வாட்ச்சின் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க.
ஜெயம் ரவிக்கு அவர் மாமியார் கொடுத்த வாட்ச்சின் மதிப்பு 1.50 கோடியாம். அப்படி என்ன இருக்கிறது அந்த வாட்ச்சில் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஓடாத படத்துக்கே இப்படின்னா படம் மட்டும் நன்றாக ஓடியிருந்தால் என்ன கொடுத்திருப்பார் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..
இதே வாட்ச் சம்பவம் ஒன்று முகேஷ் அம்பானி வீட்டிலும் அரங்கேறியது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் கையில் ஒரு கைக்கடிகாரத்தை கட்டியிருப்பார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த ஃபேஸ் புக் நிறுவனர் இந்த வாட்ச்சின் விலை என கேட்க அதற்கு கூலாக ஆனந்த் அம்பானி வெறும் 16 கோடி என கூறும் வீடியோ வைரலானது. எல்லா வாட்ச்சிலும் நேரம் ஒரே மாதிரியாகத்தானே காட்டும். அப்புறம் எதுக்கு இவ்வளவு கோடியில் ஒரு வாட்ச் என ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து நிற்கின்றனர்.