ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு தொடர்ந்து சொதப்பலாகவே அமைந்து விட்டதே என அவரது ரசிகர்கள் வருந்திக் கொண்டிருக்க, இன்னொரு சூர மொக்கை படமாக வெளியாகி உள்ளது இறைவன்.
அகிலன், பொன்னியின் செல்வன் 2 படங்களை தொடர்ந்து தற்போது இறைவன் என இந்த ஆண்டு 3 படங்களை இறக்கி உள்ளார். இன்னும் ஜன கண மண, ஜீனி, சைரன் என பல ஐட்டங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!
சரி, அது ஓரமாக இருக்கட்டும் இன்று வெளியாகி உள்ள இறைவன் படம் எப்படி இம்சை அரசனாக மாறியது என்பதை பார்த்து பக்குவமாக அந்த பக்கம் போயிடாமல் பிழைத்துக் கொள்ளுங்கள்!
பிரம்மா (விஸ்வரூபன் வில்லன் ராகுல் போஸ்) சைக்கோ கொலைகாரன். வரிசையாக இளம் பெண்களை துணிகளை உருவி படு மோசமாக கன்ணை பிடுங்கி ஸ்மைலி பந்தை வைத்து திணித்து கொடூரமாக கொன்று விட்டு போலீஸுக்கும் சவால் விடும் சென்சேஷனல் சைக்கோ என வில்லனை வெயிட்டாக காட்டி விட்டார் இயக்குனர் அகமது.
இதையும் படிங்க: படம் ஓகே!.. ஆனால், சித்தார்த் இந்த சிக்கலை ஏன் கவனிக்கல?.. சித்தா விமர்சனம் இதோ!
இந்த சைடு வந்தா அர்ஜுன் எனும் கேரக்டரில் உயர் அதிகாரிகளுக்கு கூட அஞ்சாதவானகவும், அடங்காதவனாகவும், நயன்தாராவுக்கு மட்டும் அன்பானவனாகவும் வருகிறார் ஜெயம் ரவி.
கைதி, விக்ரம் படங்களில் போலீஸாக வரும் நரேனை இங்கேயும் போலீஸாக கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். ஜெயம் ரவியின் நண்பனாக வரும் அவர், வரும் போதே டெத் கன்ஃபார்ம் என்பது ஆடியன்ஸுக்கே புரிந்து விடுகிறது. அதே போல வில்லனை வேட்டையாடும் போது நண்பனை இழந்து விடுகிறார் ஜெயம் ரவி.
இதையும் படிங்க: லியோ படத்தில் களமிறங்கிய கமல்!.. தரமான சம்பவம் செய்த லோகேஷ்!.. அப்ப LCU கன்பார்ம்….
வில்லன் பிரம்மாவை கைது செய்தாச்சி, கடமை முடிஞ்சிடுச்சு என நினைக்கும் நேரத்தில் அவன் எஸ்கேப் ஆகி விட, தனது நண்பனின் மரணத்துக்கு காரணமானவனை கொன்றே தீருவேன் என கொலை காண்டில் செல்கிறார் ஜெயம் ரவி.
இடையே இடையே லேடி சூப்பர்ஸ்டாருடன் கொஞ்சல் வேற.. வில்லனை தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளிவிட ‘அப்பாடா இப்போதாவது படம் முடிஞ்சிடுச்சு எஸ்கேப் ஆகிவிடலாம் என நினைக்கும் ரசிகர்களை அந்த இறைவனாலும் உங்களை காப்பாற்ற முடியாது என மீண்டும் பிரம்மாவின் கொலைகள் தொடர்கிறது.
அந்த புது பிரம்மா யாருடான்னு மீண்டும் ஜெயம் ரவி கண்டுபிடித்து போட்டுத் தள்ளுவது தான் இந்த இறைவன். ’இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என கேட்க வைத்து விடுகின்றனர்.
இறைவன் – இம்சை அரசன்
ரேட்டிங் – 2/5.
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…