பாரதிராஜாவின் படத்தை 15 முறை பார்த்து ரசித்த ஜெயலலிதா!.. அட அந்த படமா?!...
தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி புதிய பிரளயத்தையே ஏற்படுத்தியவர் பாரதிராஜா. மண்சார்ந்த கிராமத்து திரைப்படங்களை உருவாக்கியவர். இயல்பான கதை, திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தவர். கிராமத்து மக்களின் அன்பு, காதல், கோபம், பகை என எல்லா உணர்வுகளையும் திரையில் பிரதிபலித்தவர்.
அதனால்தான் மயிலு, சப்பாணி மற்றும் பரட்டை போன்ற கதாபத்திரங்கள் பல வருடங்கள் கழித்து இப்போதும் பேசப்படுகிறது. பதினாறு வயதினிலே ஹிட்டுக்கு பின் ராதிகாவை மற்றும் சுதாகரை அறிமுகம் செய்து கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தை இயக்கினார். அதுவும் சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: பாரதிராஜாவை ‘வட போச்சே’ன்னு ஃபீல் பண்ண வைத்த திரையுலக ஜாம்பவான்கள்… அடடே லிஸ்ட் பெரிசா இருக்கே…
கவுண்டமணி, ராதிகா, சுதாகர், கார்த்திக், ராதா, ரேகா, ராஜா, ரேவதி, பாண்டியன் என பல புதிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இவர். கிராமத்து படங்களை மட்டுமே பாராதிராஜாவில் எடுக்க முடியும் என திரையுலகினர் கமெண்ட் அடித்தார்கள்.
அந்த கோபத்தில்தான் சிகப்பு ரோஜாக்கள் எடுத்து வெற்றி பெற்று காட்டினார். மேலும், டிக் டிக் டிக், ஒரு கதையின் டைரி, கொடி பறக்குது, கேப்டன் மகள், பொம்மலாட்டம் ஆகிய படங்களை இயக்கினார். பாரதிராஜாவின் படங்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பலருமே ரசிகர்களாக இருந்தார்கள்.
அதில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். பாரதிராஜா இயக்கிய எல்லா படங்களையும் பார்த்துவிட்டு மனம் விட்டு பாராட்டியவர் அவர். பாரதிராஜாவுடன் அன்பாக பழகி அவருக்கு சில உதவிகளையும் எம்.ஜி.ஆர் செய்திருக்கிறார். அதேபோல், ஜெயலலிதாவுக்கும் பாரதிராஜாவின் படங்கள் பிடித்திருந்தது.
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தை 15 முறைக்கும் மேல் பார்த்து ரசித்திருக்கிறார் ஜெயலலிதா. பாரதிராஜா பதினாறு வயதினிலே படத்திற்கு முன்பு ஜெயலலிதா நடிக்கவிருந்த ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால், பாரதிராஜா பற்றி ஜெ.விடம் சிலர் தப்பாக சொல்லி அந்த படம் நடக்காமல் தடுத்துவிட்டனர். அந்த கதையைத்தான் பின்னாளில் ரேவதியை வைத்து புதுமைப் பெண் என எடுத்தார் பாரதிராஜா.