எம்ஜிஆராவது பயமாவது.. துணிச்சலாக வந்த ஜெய்சங்கர்!.. அடடா இப்படி பண்ணிட்டாரே?..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். தன்னுடைய கருத்துக்களை படங்களில் நடிப்பதன் மூலம் அது மக்களுக்கு நல்ல படியாக போய் சேர்வதில் மிகவும் கவனமாக இருந்தார். மேலும்
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.
மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை ஒவ்வொரு படங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் விளக்கி கூறினார். அதனாலேயே பாடல் வரிகளை கவிஞர்கள் எழுதியதும் ஒரு தடவை எம்ஜிஆர் சரிபார்த்துவிட்டு தான் படத்தில் சேர்ப்பாராம்.
இதையும் படிங்க : “அஜித் இப்படி செய்றதுக்கு ரஜினிதான் காரணம்”… ஓஹோ இதுதான் விஷயமா??
இவர் ஒரு காலத்தில் வளர்ந்து வந்தாலும் மற்றுமொரு நடிகரான ஜெய்சங்கரும் மக்கள் மனதிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி நல்ல இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரும் எம்ஜிஆரை போல மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவே இருந்தார். இந்த நிலையில் ‘சினிமா பைத்தியம்’ என்ற படத்தை தயாரிக்க ஏ.எல்.ஸ்ரீனிவாசன் முயற்சி செய்தார்.
இந்த படம் ஒரு ஹிந்தி படத்தின் தமிழ் பதிப்பகம் ஆகும். இந்த படத்தில் ஜெய்சங்கர் மற்றும் ஜெயசித்ரா லீடு ரோல்களில் நடித்திருந்தனர். மேலும் கமல் மற்றும் சிவாஜி கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஹிந்தி கதை மிகவும் அற்புதமாக இருக்குமாம். அதாவது சினிமாவில் முக்கிய நாயகனாக இருக்கும் கதாபாத்திரத்தை ஒரு மாணவி காதலிப்பது போல இருக்கும் கதை இந்த படத்தின் அடிப்படை கரு ஆகும்.
இதையும் படிங்க :நான் ஸ்டைல் கிங்னு சொன்னா அவரு ஸ்டைல் சக்கரவர்த்தி!.. யாரைச் சொல்கிறார் ரஜினி?!
அதன் தமிழ் உரிமையை ஸ்ரீனிவாசன் வாங்கினாலும் தமிழில் எடுக்க அவரால் முடியவில்லை. ஏனெனில் இந்த படத்தை தமிழில் எடுக்க எந்த இயக்குனரும் நடிகரும் நடிக்க முன்வரவில்லை. ஏனெனில் இந்த படத்தின் கதை எம்ஜிஆரை குறிப்பிட்டு சொல்வது போல இருந்ததால் அதற்கு பயந்தே யாரும் நடிக்க முன்வரவில்லையாம். ஆனால் கதை நல்ல கதை , எப்படியாவது எடுக்க வேண்டும் என்று முக்தா சீனிவாசன் இயக்க முன்வந்தார்.
மேலும் ஜெய்சங்கர் , ஜெயசித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 1975 ஆம் ஆண்டில் வெளியான சினிமா பைத்தியம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்டிலும் சேர்ந்தது.