ரஜினிக்கு முன்னாடியே ஜெய்சங்கர் இதை செய்தார்!.. மனுஷன் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க..

rajini jaysankar
திரையுலக கர்ணன் ஜெய்சங்கர் என்றே பல பேர் ஜெய்சங்கரை அழைத்ததுண்டு. இல்லை என்று வந்தவர்களுக்கு தன்னால் முயன்ற அளவு உதவிகளை செய்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வழிகாட்டியவர் ஜெய்சங்கர். படத் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலும் தனது சம்பள விஷயத்தில் கறார் காட்ட மாட்டார்.

rajini jaysankar
சில சமயங்களில் அந்த சம்பளமே அவரை வந்தடைந்திருக்காது. அதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். இந்த நிலையில் ரஜினி எப்படி நலிந்த கலைஞர்களுக்காக அருணாச்சலம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரோ அதே மாதிரி ரஜினிக்கு முன்னாடியே ஜெய்சங்கரும் அதே மாதிரி ஒரு செயலை செய்திருக்கிறார்.
அதாவது அருணாச்சலம் படம் நலிந்த கலைஞர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்தப் படம். அந்தப் படத்தின் மூலம் வந்த வருவாயை அதன் தயாரிப்பாளர்களான நலிந்த கலைஞர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார் ரஜினி. அதே மாதிரி தான் அப்பவே ஜெய்சங்கரும் செய்திருக்கிறார்.

rajini jaysankar
ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த படங்களில் ‘ நல்லதுக்கு காலம் இல்லை’ என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை
அப்போதுள்ள சில டெக்னீஷியன்கள் சேர்ந்து ஆளுக்கு 3000 முதலீட்டில் இந்தப் படத்தை தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடிக்க அப்போது ஜெய்சங்கர் என்ன சம்பளம் வாங்கினாரோ அதை விட குறைவான சம்பளத்தை தான் வாங்கியிருக்கிறார் இந்தப் படத்திற்கு.
படம் ஓரளவு வசூலை பெற்றது. அந்த பணத்தை டெக்னீஷியன்கள் பகிர்ந்து கொண்டனர். அதே போல் தான் கமலும். எஸ்.பி, முத்துராமனின் சில யூனிட்களுக்காக குறைந்த சம்பளத்தில் படம் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். ஆனால் இன்றைய தலைமுறையினர்கள் அந்த மாதிரி ஒரு செயலை செய்வார்களா? என்று யோசிக்கத்தான் வைத்திருக்கிறது.

jaysankar kamal
சம்பளமே 100 கோடிக்கு மேல் வாங்கும் அவர்கள் எப்படி தன் சம்பளத்தை விட்டுக் கொடுப்பார்கள்? இருந்தாலும் அவர்களுக்கு பின்னாடி எத்தனையோ குடும்பங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காகவது நடிகர்கள் கொஞ்சம் இறங்கி வந்தால் நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க : விஜய்க்கு தகுதியான இயக்குனர் இவர் தான்!.. லோகேஷ் இல்லங்க.. சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர்..