ஸ்லோ பாய்சன் கொடுத்து பிரபல வில்லன் நடிகர் கொலை முயற்சி.. இவருக்கா இந்த நிலைமை?

Published on: June 21, 2023
---Advertisement---

சினிமா துறையில் மட்டுமில்லாமல் மற்ற துறையிலும் ஒருவரின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிரான சதி வேலைகள் நடக்கத்தான் செய்யும். அதிலும் ஒருவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டாலோ அல்லது குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்சனை என்றாலோ உடனே அவர்களை காலி செய்து விட வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு ஏற்படத்தான் செய்கின்றன.

jd1
jd1

சமீபத்தில் கூட பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம் இதற்கு ஒரு உதாரணம். ஆரம்பகாலத்தில் இருந்து கிட்டத்தட்ட 80 90களில் தன்னுடைய உடல் பலத்தால் அனைவரையும் மிரள வைத்தவர் பொன்னம்பலம் .ஆனால் அவருடைய கதி அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்தனர் அவருக்கு பிடிக்காத சிலர்.

அந்த வகையில் மற்றும் ஒரு வில்லன் நடிகர் மாட்டிக் கொண்டார். எழுத்தாளர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடகர் இயக்குனர் என பன்முக திறமைகள் கொண்டவர். தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் சர்வம் ,சமர் ,அரிமா நம்பி ,பாஸ்கர் தி ராஸ்கல், சிகாமணி போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .பொதுவாக இவர் வில்லன் கதாபாத்திரத்திலேயே அறியப்பட்டார்.

இவருடைய செய்தி தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில காலமாகவே இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாம். இவரை பரிசோதித்த எத்தனையோ டாக்டர்கள் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். மேலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சக்கரவர்த்திக்கு திடீரென்று இப்படி ஆனது எல்லோருக்கும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

jd2
jd2

அதன் பிறகு தான் இவருடைய நெருங்கிய ஒரு நண்பர் டாக்டர் இவரை முழுவதுமாக பரிசோதித்து இவருடைய உடலில் ஸ்லோ பாய்சன் இருப்பதை கண்டறிந்து இருக்கிறார். அதன் பிறகு ஆராய்ந்ததில் இவருக்கு நெருக்கமான ஒருவர்தான் கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவர் சாப்பிடும் உணவுகளில் ஸ்லோ பாய்சன் கொடுத்து இவரை தீர்த்து கட்ட பார்த்தாராம். அவர் ஏன் அவ்வாறு செய்தார் எதற்காக செய்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பாக்கியராஜ் மனைவி இல்லன்னா நான் இல்ல!.. உண்மையை பகிர்த்த டிவி சீரியல் நடிகை…