கமலுக்காக தயாரான படத்தில் நடித்த ஜீவா... ஆச்சர்யமா இருக்கே!..

தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கிமானவர் நடிகர் கமல்ஹாசன். சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார்.
சிறுவயது முதலே கமல்ஹாசன் சினிமாவில் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட கமல்ஹாசன் நடிக்கவிருந்த திரைப்படத்தில் வேறு ஒரு நடிகர் நடிப்பது கடினமான விஷயமாகும். ஆனாலும் அப்படி ஒரு படத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் மகன் என்றாலும் கூட தனது தனிப்பட்ட திறமையை பயன்படுத்தியே சினிமாவில் வாய்ப்பை பெற்றார் ஜீவா. ஆரம்பக்கட்டத்தில் காதல் படங்களில் நடித்து வந்தார் ஜீவா. அவர் நடித்த தித்திக்குதே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ராமிற்கு வந்த சங்கடம்:
அந்த சமயத்தில்தான் இயக்குனர் ராம் கற்றது தமிழ் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வந்தார். அந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போதே அது கமல்ஹாசனுக்கான படம் என முடிவு செய்திருந்தார் ராம். ஆனால் அப்போது கமல்ஹாசனிடம் வாய்ப்பு வாங்குவது அவருக்கு கடினமான காரியமாக இருந்தது.

இந்த நிலையில் படத்தின் கதையை கேள்விப்பட்ட நடிகர் ஜீவா அதில் நடிக்க விரும்பினார். ஆனால் இதில் இயக்குனர் ராமிற்கு விருப்பமில்லை. ஏனெனில் இதுவரை காதல் நாயகனாக இருக்கும் ஜீவா இந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துவருவாரா? என்று சந்தேகமாகவே இருந்தார் ராம்.
ஆனால் அப்போது வேறு வழி இல்லாததால் ஜீவாவை வைத்தே அந்த படத்தை இயக்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக நடித்திருந்தார் ஜீவா. ஜீவாவிற்கும் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் முக்கிய திரைப்படமாக அமைந்தது.