இயக்குனர் ஹீரோ எல்லாரும் படுக்க கூப்புடுவாங்க! – கண்ணீர் விட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை..

சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளி திரையில் கதாநாயகியாக முயற்சித்து வரும் நடிகைகளில் நடிகை ஜீவிதா கிருஷ்ணனும் முக்கியமானவர்.
நடுத்தர வர்க்க பெண்கள் சினிமாவிற்குள் வரும்போது இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நடிகை ஜீவிதாவும் கூட அப்படியான பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.
தமிழில் இவர் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதற்கு முன்பு முதலில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்து வந்த ஜீவிதா பிறகு விஜய் டிவியில் ஆஃபிஸ் என்னும் நாடகத்தில் நடித்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பாலு மகேந்திரா அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு அவர் வந்தார்.
அங்கு அவரிடம் பேசிய இயக்குனர். கதையில் முக்கிய கதாநாயகியாக ஒருவர் நடிக்கிறார். அதற்கு அடுத்து இரண்டாவது முக்கிய கதாநாயகியாக உங்களை நடிக்க வைக்க இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். அதுதான் முதல் படம் என்பதால் ஜீவிதாவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அதற்கு சில விதிமுறைகளை இயக்குனர் கூறியுள்ளார்.
படுக்கைக்கு அழைத்த இயக்குனர்:
அவர் கூறும்போது “படத்தில் வாய்ப்பு வேண்டும் என்றால் இயக்குனர், தயாரிப்பாளர், கேமிரா மேன், மேனஜர், படத்தின் கதாநாயகன் அனைவரையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். நாங்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் உங்களை 15 நாட்கள் தங்க வைப்போம். அங்கு உங்கள் அறைக்கு எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வந்து போவோம்”. அதன் பிறகு உங்களை படத்திற்கு கதாநாயகி ஆக்கிவிடுவோம் எனக் கூறி ஒரு பெரிய தொகையை சம்பளமாக தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஜீவிதா கண்ணீருடன் வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை அவர் விளக்கியிருந்தார்.