Categories: Cinema History Cinema News latest news

ரயில்வே கிராசிங்கில் பிச்சையெடுத்த நாகேஷ், ஜெயகாந்தன்…சுவாரஸ்ய காரணம் தெரியுமா?

நாகேஷ் எனும் மகா கலைஞனின் புகழ் தமிழ் சினிமா இருக்கும் வரை அழியாது. தாராபுரத்தில் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரனாகப் பிறந்த அவர், ராமாயணம் நாடகம் பார்த்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னை வந்து, கவிஞர் வாலியின் அறையில் தங்கிக் கொண்டு சினிமா வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார். பல நாட்களில் ஒரு வேளை சாப்பாடு கூட கஷ்டம்தானாம்.

அப்படி ஒரு நாள் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய நாடகம் ஒன்றில் நடிக்க நாகேஷூக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவனாக நாகேஷ் நடித்த அந்த நாடகத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தது எம்.ஜி.ஆர். நாடகத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய எம்.ஜி.ஆர், அவருக்கு ஒரு கோப்பையைப் பரிசளித்தார். அதைத் தனது வீட்டில் வைக்க இடமில்லை.

ஆனால், கோப்பையைத் திருடினாயா என போலீஸ் அவரிடம் விசாரித்ததுதான் நடந்திருக்கிறது. 1958ம் ஆண்டு முதல் 2008 வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார் நாகேஷ். எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி ரஜினி – கமல் மற்றும் விஜய் – அஜித் என பல்வேறு தலைமுறை நடிகர்களோடு நடித்துப் புகழ்பெற்றவர். கே.பாலச்சந்தர் எழுதிய சர்வர் சுந்தரம் நாடகம் படமாக எடுக்கப்பட்டது. அதில், நாகேஷ் ஹீரோவாக நடித்தது, அவரது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஒரே ஒரு நகைச்சுவையால் கமலின் அகங்காரத்தை அடக்கிய நடிகர் நாகேஷ்…

அதன்பிறகு இவர் நடித்த திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, எதிர்நீச்சல் போன்ற படங்கள், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உயர்த்தியது. 1970 காலகட்டத்தில் ஒரு வருடத்துக்கு 35 படங்களுக்கு மேல் இவர் நடித்திருக்கிறார். அதேபோல், ஒரே நேரத்தில் இவர் ஆறு படங்களுடைய ஷூட்டிங்கில் அடுத்தடுத்து கலந்துகொள்வாராம். அந்த அளவுக்கு பிஸியான நடிகராக இருந்தவர். சினிமாவில் மட்டுமல்ல, இவரது நிஜ வாழ்விலும் பல காமெடியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் பற்றி பார்க்கலாம்.


இவரும் ஜெயகாந்தனும் நல்ல நண்பர்கள். ஒரு முறை இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொழுப்பேடு ரயில்வே கிராஸிங், டிரெய்ன் வருவதற்காக மூடியிருந்ததாம். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற சூழலில், என்ன பண்ணலாம் என இருவரும் யோசித்திருக்கிறார்கள். அப்போது, ரெண்டு பேரும் பிச்சை எடுக்கலாமா என ஜெயகாந்தன் கேட்டிருக்கிறார். விநோதமான ஐடியாவாக இருந்தாலும், ஜெயகாந்தன் கேட்டவுடன் நாகேஷ் ஓகே சொல்லியிருக்கிறார். கூட்டமாக இருந்த ரயில்வே கிராஸிங்கில் இருவரும் வேட்டி, சட்டையைக் கழற்றி வைத்து விட்டு அண்ட்ராயருடன் பிச்சை எடுத்திருக்கிறார்கள். இதில், சோகம் என்னவென்றால் நாகேஷின் தட்டில் கொஞ்சம் சில்லறைகள்தான் விழுந்ததாம். அவரை விட அதிகமாக ஜெயகாந்தனின் தட்டில் விழுந்ததாம்.

Published by
Akhilan