சினிமா உலகின் ஜாம்பவான் ஆன நடிகர் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை கண்டு இயக்குனர்கள் அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்து ஹீரோவாக்கினர்.
1980க்களில் வெளியான பெரும்பாலான திரைப்படம் ரஜினியின் திரைப்படமாகவே இருந்தது. ரஜினி திரை வாழ்க்கைக்கு மைல் கல்லாக அமைந்த பில்லா திரைப்படமும் 1980ல் தான் வெளியானது. அதிரடி காட்சிகளுடன் அரசியல் வசனங்கள் அடங்கிய இந்த படத்தில் நடிக்க மறைந்த முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், திரைப்படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என கூறி ஜெயலலிதா நடிக்க மறுத்துவிட்டாராம். தயாரிப்பாளர் எவ்வளவோ கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம். அதன் பின்னர் அந்த ரோலில் நடிகை ஸ்ரீபிரியா நடித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை பல சர்ச்சைகளை சந்தித்ததால் ஜெயலிதாவின் அரசியலுக்கு ரஜினி எதிர்ப்பு தெரிவித்தாராம்.
பின்னாளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் மற்றும் எதிர்கட்சியினரின் அரசியல் ஆளுமையை ஒற்றை பெண்மணியாக நின்று ஜெயித்ததை எண்ணி பாராட்டு விழா ஒன்றில் ரஜினி ஜெயலலிதாவை “தைரியலட்சுமி” என்று மேடையில் புகழ்ந்து பெருமிதம் கண்டார். அரசியலில் எலியும் புலியாக இருந்தாலும் திரைத்துறை என்றதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஒருவர் ஒருவர் குறித்து பெருமை பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…