More
Categories: Cinema History Cinema News latest news

கமலின் பிரம்மாண்ட படத்தில் நைசா நுழைந்த ஜெயம் ரவி.. பார்ட்டி செம கில்லாடிதான்!..

தமிழ் சினிமாவில் தடம் பதித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி. இவர் பிரபல எடிட்டர் மோகனின் மகன் ஆவார். இவரின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். இருவரது காம்பினேஷனிலும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ”பொன்னின் செல்வன்” படம் இவருக்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமைந்தது.

ravi

இவர் இப்பொழுது ”பொன்னியின் செல்வன் 2”,” சைரன்”, ”ஜெயம் ரவி 30” எனும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானுவின் படைப்பில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம்தான் ”ஆளவந்தான்”. இப்படத்தில் இரு வேடங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். அப்பொழுது மிகுந்த பொருள் செலவில் எடுக்கபட்ட படமாக இருந்தது.

Advertising
Advertising

kamal

இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் எடிட்டர் மோகனும் நெருங்கிய நண்பர்கள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் எடிட்டர் மோகன் தனது இளைய மகனான ரவியை இப்படத்திற்கு உதவி இயக்குனராக சேர்த்து விடுகிறார். ரவியும் சில வாரங்கள் அப்படத்தில் பணியாற்றுகிறார். பின்னர் தான் தெரிய வந்தது. ரவி ஒரு தீவிர கமல்ஹாசனின் ரசிகர் என்பதால் அவரின் நடிப்பு நுணுக்கங்களை பற்றி தெரிந்து தெரிந்துகொள்ளவே இப்படத்தில் பணிபுரிந்தார் என்று சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

kamal and jeyamravi and mohanraja

2003ஆம் ஆண்டு அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ”ஜெயம்” என்னும் படத்தில் அறிமுகபடுத்துகிறார். இத்திரைப்படத்தில் கோபிசந், சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் பூஜையின் போது கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அப்பொழுது செண்டிமெண்ட் காரணமாக கமல் ரவியை வைத்து ஒரு காட்சி இயற்றியுள்ளார். படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.பின்னர் படத்தின் வெற்றி ரவியை ”ஜெயம்” ரவி என்றும் அடையாளமாக்கியது.

Published by
Sathish G

Recent Posts