மனுஷன் சொன்னது தூக்கி வாரி போட்டுருச்சு!...4 வருஷம் இப்படியா?!..ஷாக் ஆன ஜெயம் ரவி...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் டீஸர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக இந்த படத்தில் நடித்த நடிகர்களை எல்லாம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்க நடிகர் ஜெயம் ரவியும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு தன் அனுபவங்களை பகிர்ந்தார்,
ஏற்கெனவே ஜெயம் ரவியும் விக்ரமும் நெருங்கி பழகும் அளவுக்கு நண்பர்களாம். படத்தில் இருவரும் சகோதரர்களாக நடித்திருக்கின்றனர். சூட்டிங் போக ஜெயம் ரவி விக்ரமிடம் சினிமா சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வாராம். ஒருசமயம் விக்ரமிடம் ஒரு வருடத்திற்கு ஒரு படம் இல்லைனாலே எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். நீங்க எப்படி 3, 4 வருஷத்திற்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள்.
4 வருஷம் என்ன பண்ணுவீங்க என கேட்க அதற்கு விக்ரம் மூச்சு பயிற்சி பண்ணு. எல்லாம் சரியாகி விடும். மேலும் ரிசல்டும் நல்லதாகவே அமையும் என கூறினாராம். அதை கேட்ட ஜெயம் ரவி 4 வருஷமா எப்படி மூச்சு பயிற்சி என ஷாக் ஆகி விட்டாராம். ஆனால் விக்ரம் உண்மையிலயே அதை தான் பண்ணுவாராம். அப்படி இருந்ததனால் தான் ஐ, அன்னியன் போன்ற தரமான படங்கள் சினிமாவிற்கு கிடைத்தது என ஜெயம் ரவி பெருமையாக கூறினார்.