Cinema News
ஜெயம் ரவி தொடங்கி ஏ.ஆர் ரகுமான் வரை!… 2024-ல் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலங்கள்!…
2024ம் வருடத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீப நாட்களாக சினிமாவில் விவாகரத்து பெற்று பிரியும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சோசியல் மீடியாக்களில் அவர்கள் விவாகரத்து அறிவிக்கும் போது அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைகிறார்கள். இத்தனை வருடம் ஒன்றாக இணைந்து வாழ்ந்து விட்டு இப்படி விவாகரத்து பெற்று பிரிகிறீர்களே என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் ‘வைல்டு கார்டு’ போட்டியாளர்? .. சூடு பிடிக்குமா?!..
அந்த வகையில் இந்த ஆண்டு பல பிரபலங்கள் தங்களது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். அதிலும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை சேர்ந்து வாழ்ந்து விட்டு நடிகர், நடிகைகள் விவாகரத்து அறிவிக்கிறார்கள். தனுஷ் தனது மனைவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார். இவரின் விவாகரத்து பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி: இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலாவதாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த மே 13ஆம் தேதி ஜீவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் நடிகர் ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டும் இல்லாமல் அவரது மனைவி ஆர்த்தியும் இந்த விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்து இருக்கின்றார். இதனால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
ஏ ஆர் ரகுமான் – சாய்ரா: இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா இந்த பட்டியலில் இணைந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நேற்று இரவு ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தனது சமூக வலைதள பக்கத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது திருமணமாகி பல வருடங்கள் கழித்து எனது கணவர் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்திருக்கின்றேன். இந்த முடிவானது எங்கள் உறவில் ஏற்பட்ட சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியிருந்தார். இந்த இக்கட்டான சூழலில் எங்களின் நிலைமையை புரிந்து கொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: Thalapathy 69: இதென்னடா அண்ணனுக்கு வந்த சோதனை… கால்ஷீட் கேட்டாலே தெறிச்சு ஓடுறாங்க?
இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் விவாகரத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தங்களின் திருமண வாழ்வில் ஏற்படும் சில மனக்கசப்புக்கு திடீரென்று விவாகரத்து முடிவை எடுப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்