பா.ரஞ்சித் வாட்ஸ் ஆப் பார்த்து படம் எடுத்துருக்காரு- விளாசும் பொன்னியின் செல்வன் படத்தின் வசன கர்த்தா…
ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், ஆதிக்கம், அதிகாரம் போன்றவற்றை விமர்சிக்கும் வகையில் திரைப்படம் எடுக்கும் வழக்கம் கொண்டவர் பா.ரஞ்சித். "அட்டக்கத்தி" தவிர்த்து "மெட்ராஸ்", "கபாலி", "காலா", "சார்பட்டா பரம்பரை" ஆகிய திரைப்படங்களை தனது தனித்துவமான ஆதிக்க அரசியல் குறித்த எதிர்ப்புகளை மையமாக வைத்தே உருவாக்கியிருந்தார். எனினும் அவர் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் காதலை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது.
LGBT சமூகம் குறித்து மிகவும் வெளிப்படையாகவே பேசியிருந்தது அத்திரைப்படம். ஆதலால் அத்திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எழுத்தாளர் ஜெயமோகன், "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் குறித்து தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
"வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் பாப்புலராக இருக்கக்கூடிய புரட்சிகர கருத்துக்களை எடுத்து அதனை படமாக உருவாக்கியது போல் இருந்தது. ஃபேஸ்புக்கில் மொத்த தமிழ் சமுதாயமும் புரட்சிகரமாக இருக்கிறது.
ஆனால் ரியாலிட்டி என்பது வேறு. தமிழ் சமூகம் முழுக்க நுகர்வு கலாச்சாரத்தில்தான் இருக்கிறது. முழுக்கவே லௌகீக வாழ்க்கையில் இருக்கும் சமூகம். ஆனால் ஃபேஸ்புக்கில் வந்து புரட்சிகர வேஷத்தை போட்டுக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு படத்தை உருவாக்கினால் பேஸ்புக் மாதிரியேத்தான் அப்படம் இருக்கும். ஃபேஸ்புக்கை நம்பி படம் எடுக்கக்கூடாது" என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.