More
Categories: latest news tamil movie reviews

கடைசியா ராகவா லாரன்ஸ் முகத்துல சந்தோஷம்!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் இதோ!..

ஜகமே தந்திரம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ருத்ரன், சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிப்பு என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பக்கமே போகக் கூடாது என நினைத்தாலும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யாவுக்காக பார்க்கலாம் என்று சென்ற ரசிகர்களை நிச்சயமாக அந்த மூவருமே ஏமாற்றவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் படங்கள் ஒன்று சூப்பர் என இருக்கும் இல்லை சூர மொக்கையாக இருக்கும் இந்த படம் சூப்பருக்கும் சூர மொக்கைக்கும் நடுவில் ஒரு நல்ல படமாகவே வந்திருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?

பார்ட் 2 எடுக்கிறேன் என ஜிகர்தண்டா பெயரை கெடுக்கவில்லை. கார்த்திக் சுப்புராஜ் கொஞ்சம் தனக்குள் இருக்கும் வெற்றிமாறனை வெளியே இறக்கி விட்டுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனைகளை பற்றி ஜகமே தந்திரம் படத்தில் சொல்ல வந்து சரியாக சொல்ல முடியாமல் சிக்கிக் கொண்டார். ஆனால், இந்த படத்தில் அந்த சிக்கல் இல்லை.

நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரை வீழ்த்தி விட்டு அரசியல்வாதியாக இருக்கும் நபர் சிஎம் ஆக ஆசைப்படுகிறார். அப்படி ஆக இடையூறாக இருக்கும் நான்கு நபர்களில் ஆலீஸ் சீசர் எனும் ராகவா லாரன்ஸும் ஒரு நபர்.

எஸ்.ஜே. சூர்யாவை வைத்து நடத்தும் அண்டர் கவர் ஆப்பரேஷனில் பத்து தல படத்தை போல எஸ்.ஜே. சூர்யாவால் ராகவா லாரன்ஸின் கதையை கேட்டு கொல்ல முடியவில்லை.

இதையும் படிங்க: ஜப்பானுக்கே காவடி எடுத்தாலும் படம் ஜெயிக்காதுடி!.. கார்த்தியை காவு வாங்கிய ஜப்பான்.. விமர்சனம் இதோ!..

சினிமாவை வைத்து தமிழ்நாட்டின் சிம்மாசனத்தையே பிடித்த எம்ஜிஆரின் கதையை கொஞ்சம் பட்டி டிக்கரிங் செய்து ரஜினிகாந்த் போர்ஷனை ராகவா லாரன்ஸுக்கு கொடுத்து ஒரு கலவையான சினிமாவை உருவாக்கி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக நடித்து ஏமாற்றி ராகவா லாரன்ஸை கொல்ல போடும் திட்டங்கள் மார்க் ஆண்டனி போல இங்கேயும் சொதப்புகிறதா? என்ன ஆனது என்பதையும் இரண்டாம் பாதியில் மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் அங்கே நடக்கும் பிரச்சனைகளையும் விரிவாக காட்டி படத்தை தீபாவளி ட்ரீட்டாக கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ராகவா லாரன்ஸுக்கு பல படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து வந்த நிலையில் அவருக்கு சரியான கம்பேக் படமாக அமைந்துள்ளது. அந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் மேட்டர் எல்லாம் வேறலெவல்!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: செம டேஸ்ட்!

ரேட்டிங்: 3.25/5.

Published by
Saranya M

Recent Posts