விபத்தில் சிக்கிய ஜீவா.. சம்பவ இடத்திலேயே கோப முகம் காட்டிய அதிர்ச்சி பின்னணி!..

by Akhilan |   ( Updated:2024-09-11 14:36:13  )
விபத்தில் சிக்கிய ஜீவா.. சம்பவ இடத்திலேயே கோப முகம் காட்டிய அதிர்ச்சி பின்னணி!..
X

Jiiva

Jiiva: கடந்த வாரம் செய்தியாளர்களிடம் சண்டைக்கு சென்ற ஜீவா மீண்டும் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் பெண்கள் மீதான பிரச்னைகளுக்கு உருவாக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை கசிந்தது. இதுகுறித்து தமிழ் நடிகர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்

அப்போ நடிகர் ஜீவா நல்ல விஷயத்து வந்துருக்கேன். இப்போ இத கேட்டு ஏன் அபசகுணம் செய்கிறீர்கள் என பேசி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஜீவாவை ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து மனைவியுடன் சொகுசு காரில் சின்ன சேலம் நோக்கி பயணப்பட்ட நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. திடீரென ரோட்டில் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது தடுப்பு சுவற்றில் மோதி தலை குப்புற கவிழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!

இதில் அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவர் மனைவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த மக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட போது தான் அது ஜீவா என்பதே தெரிந்ததாம்.

Jiiva

அப்போது அங்கு வந்த செய்தியாளர்கள் ஜீவாவிடம் கேள்வி எழுப்ப கெட்ட வார்த்தையில் தட்டி அவர்களை கோபத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Next Story