கடந்த 15 ஆம் தேதி ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஒரு நகைச்சுவை ஜானரில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை நிதிஷ் சஹதேவ் என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். படம் வெளியானதில் இருந்து இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.
சாவு வீடு மற்றும் கல்யாண வீடு இரு வீடு அருகருகே இருக்க ஒரே நேரத்தில் கல்யாணமும் , இறந்த வீட்டில் சடங்குகளும் நடத்தப்படுவதில் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை எழுதுகிறது. அதை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து தலைவராக நடிகர் ஜீவா இந்த படத்தில் நடித்திருக்கிறார். தம்பி ராமையா , இளவரசு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
அவர்களை சுற்றி தான் இந்த படமே நகருகிறது. இந்த படத்திற்கு பெரிய அளவு ப்ரோமோஷன் எதுவுமே கிடையாது. அதனால் இந்த படம் வந்ததே சில பேருக்கு தெரியாது. ஆனால் படம் பார்த்தவர்கள் அனைவரும் இந்த படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். இந்த பொங்கல் ஜீவா பொங்கலாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு பெரிய ஹைப் இல்லை. ஆனால் போக போக இந்தப் படத்திற்கு மக்களின் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஜீவா தற்போது youtube சேனலில் பேட்டி கொடுத்து வருகிறார். அவரிடம் உங்களுக்கு நீங்கள் போட்டியாக சிவகார்த்திகேயனை நினைக்கிறீர்களா என கேட்டனர்.\
அதற்கு ஜீவா, என்னை பொருத்தவரைக்கும் ரவிமோகன் , சிம்பு, தனுஷ் இவர்களைத்தான் நான் போட்டியாக கருதுகிறேன். இப்போது உள்ள சிவகார்த்திகேயனை நான் நினைக்கவில்லை. வேண்டுமென்றால் அவர்களுடைய பிஆர் டீமை தான் நான் போட்டியாளராக தருகிறேன். அவர்கள் பண்ணுகிற பிரமோஷன் இருக்கே! அடுத்து இவர் தான், அடுத்த தலைவர் இவர்தான் என ஏகப்பட்ட அளவு அவர்களை பற்றி புரோமோஷன் செய்து வருகிறார்கள். அவர்களைத்தான் என்னுடைய போட்டியாளராக நான் கருதுகிறேன் என ஜீவா கிண்டலாக பதில் அளித்திருக்கிறார்.




